spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்குடும்பத் தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்…

குடும்பத் தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்…

-

- Advertisement -

பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்..மது போதையில் தாயாரை அவதூறாக பேசியதால் நடந்த விபரீதம்…போலீசார் விசாரணைகுடும்பத் தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்…மதுரை மாவட்டம் மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்த அரவிந்த்(29).இவரது அண்ணன் ராஜா என்பவரால் இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனது தாயை அவதூறாக பேசியதால் உடன்பிறந்த தம்பியை கொலை செய்த அண்ணன் ராஜா மேலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மேலூர் அருகே உள்ள வினோபா காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டி – புனிதா தம்பதியர்களுக்கு நாண்கு ஆண்மகன்கள் உள்ள நிலையில், கடைசி மகனான அரவிந்த் மதுபோதையில் வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில்  தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இவர் மீது 16 வழக்குகள் மேலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று இரவு மது போதையில் தனது தாய் குறித்து அவதூறாக பேசி வீட்டில் சண்டையிட்டுள்ளார்.இந்த ஆத்திரத்தில் அருகில் இருந்த அவரது அண்ணன் ராஜா என்பவர் இரும்பு கம்பியால் அரவிந்தை தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அரவிந்த் உயிரிழந்தார்.

we-r-hiring

இதனையடுத்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் நிகழ்வு இடத்திற்கு சென்று அரவிந்த் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தம்பியை கொலை செய்த ராஜா மேலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

போதையில் தனது தாய் குறித்து அவதூறாக பேசியதாகவும் தினந்தோறும் வீட்டில் வந்து சண்டை இட்டு வந்ததால் ஆத்திரத்தில் தனது தம்பியை கொலை செய்ததாக ராஜா மேலூர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அழைத்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ மற்றும் செய்தி அனுப்பப்பட்டுள்ளது சார் நன்றி.

திருமணமான ஓரே மாதத்தில்… வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல்… மனவேதனையில் பிரபல அல்வா கடை உரிமையாளர்

MUST READ