ஆந்திராவில் ரயிலில் சீட் உறுதி செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது அந்த பெண் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவா் நெல்லூரில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி முதலாமாண்டு படித்து வருகிறாா். கல்லூரிக்குச் செல்வதற்காக கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி நரசாபுரம் – தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். இருப்பினும், பயணிகளின் அதிக தேவை காரணமாக, அவருக்கு வைட்டிங் லிஸ்ட் 31 ஆக இருந்தது. இதனால், அந்த இளம் பெண் டிக்கெட் பரிசோதகரிடம் இருக்கை பெற்று ரயில் நிலையத்தை அடைய முடிவு செய்தார். மாலை ஐந்து மணிக்கு அவர் ஏற வேண்டிய நசாபுரம் – தர்மாவரம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இருக்கை முன்பதிவு செய்யப்படவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு பணியில் இருந்த டிடியிடம் இருக்கை கேட்டுள்ளார்.

இருக்கை உறுதி செய்யப்படும் வரை எஸ்7 இன் இருக்கையில் அமரச் சொன்னார். அது வழக்கமாக ரயில்களில் டிடிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையாகும். டிடி நல்ல மனதுடன் தனக்கு இருக்கை கொடுத்ததாக நினைத்து அந்த இளம் பெண் அந்த இருக்கையில் அமர்ந்தார் ரயில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. பெட்டியில் குறைவாகவே பயணிகள் இருந்தனர். இந்நிலையில் அந்த இளம் பெண் டி.டி. தனக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கையை கொடுப்பாரா இல்லையா என்றும் இருக்கை கிடைக்கவில்லை என்றால் நெல்லூருக்கு எப்படிப் செல்வது என்றும் யோசித்துக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் டி.டி. அந்த பெண்ணின் அருகில் வந்து அமர்ந்தாா். தன்னை அபிஜித் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் இருக்கையை உறுதி செய்வதாக கூறினார். அப்படியே பேச ஆரம்பித்து, இருக்கையை உறுதி செய்வது போல், அந்த இளம் பெண்ணின் இடுப்பு, தோள் மற்றும் அவரது உடலின் தனிப்பட்ட பகுதிகளில் அவா் அத்துமீறித் தொட்டு இருக்கிறாா். இதனை சற்றும் எதிர்பாராத அந்த இளம்பெண் இதனை யாரிடமாவது சொல்லலாம் என்று பார்த்தால் சுற்றி யாரும் இல்லை. இதனால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்போது ஒரு ரயில் நிறுத்தம் வந்துள்ளது. சில பயணிகள் ரயிலில் ஏறியதை பாா்த்த பெண் நிம்மதி அடைந்துள்ளாா்.
அதன் பிறகு ஏசி பெட்டியில் சீட் தருவதாகச் சொல்லி டிடி அங்கு அழைத்துச் சென்றார். இளம் பெண்ணை கீழே உள்ள இருக்கையில் படுக்கச் சொன்ன டிடி அபிஜித், சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அங்கு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தாா். இளம் பெண்ணுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மேலும் அந்தப் பெட்டியில் யாரும் இல்லாததால் அந்த பெண் இன்னும் பயந்து போனாா். விஜயவாடாவின் புறநகர்ப் பகுதியில் ரயில் நின்றதும் டிடி அபிஜித் கழிப்பறைக்குச் சென்றிருந்தாா். அப்போது அந்த பெண் அந்த பெட்டியில் இருந்து இறங்கி பயணிகள் இருந்த பெட்டிக்கு சென்று டிடி விவகாரம் குறித்து அவர்களிடம் கூறினாா். சக பயணிகளின் உதவியுடன், விஜயவாடா ஜிஆர்பி அதிகாரிகளிடம் புகார் அந்த பெண் அளித்தாா். அந்த இளம்பெண் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய டிடி அபிஜித் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் இந்த விஷயத்தில் டிடி அபிஜித்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.
மேலும் இளம் பெண்ணின் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில், பீமாவரம் போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். ஒருப்புறம் பெண்கள் பாதுகாப்பிற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வரும் சூழலில் மத்திய அரசின் ரயிலில் இளம் பெண்ணுக்கு டி.டி. மூலம் பாலியியல் சீண்டல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருகி வரும் தெருநாய்களின் அட்டூழியம்!! மேலும் இரு குழந்தைகளை கடித்து குதறிய தெருநாய்…


