spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்குழந்தை வரம் வேண்டி பூஜைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை

குழந்தை வரம் வேண்டி பூஜைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை

-

- Advertisement -

குழந்தை வரம் வேண்டி பூஜைக்கு சென்ற பெங்களூரில் வாழும் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை

கணவன், நண்பர்கள் மற்றும் சாமியாரால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபா,36 வயது பெண். இவருக்கு  2016 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அந்த வாலிபர் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.  திருமணத்திற்கு பிறகு அந்த வாலிபர் வேறு நிறுவனத்திற்கு பணிக்கு மாறியதால் பெங்களூருக்கு மனைவியுடன் குடி பெயர்ந்து வசித்து வந்தார்.

குழந்தை வரம் வேண்டி பூஜைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை

we-r-hiring

பின்னர் 2020 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி அதில் வசித்து வந்தனர் . திருமணம் முடிந்து 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதை தொடர்ந்து பெங்களூரில் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையத்தில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கரு கலைந்து போனது . இந்த நிலையிலே அந்த பெண்ணின் கணவர் பெங்களூரில் உள்ள ”இந்து பிரசங்க கூட்டத்திற்கு” அடிக்கடி சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் நன்பர் ஒருவர் மூலம் சாமியார் ஒருவர் பற்றி தெரியவந்துள்ளது.

குருஜி நந்தா

மத்திய பிரதேச மாநிலம் தட்டுவாடா என்ற இடத்தில் அந்த சாமியார் ஆசிரமம் நடத்தி வருவதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து மத்திய பிரதேசத்திற்கு சென்று  சாமியார் கூறிய பூஜை முறைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இரவு நேரங்களிலும், நவராத்திரி போன்ற முக்கிய தினங்களிலும் செய்யும் பூஜை முறைகளை பார்த்த அப்பெண்ணுக்கு அந்த நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இதுகுறித்து அப்பெண் தனது கணவரிடம் கேட்ட போது குழந்தை வேண்டும் என்பதற்காக தான் பூஜைகள் செய்து வருவதாக கூறியிருக்கிறார். இதை நம்பிய பிரதீபா தனது கணவருடன் மத்திய பிரதேசத்தில் உள்ள அந்த சாமியாரின் ஆசிரமத்திற்கு சென்று 20 நாட்கள் தங்கி இருந்து கணவனின் கட்டாயத்தின் பேரில் சேவை செய்ததாக கூறப்படுகின்றன.

இந்த நிலையிலே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவைக்கு அப்பெண் வந்திருந்தார். அதன் பிறகு அவரது தந்தைக்கு விபத்து ஏற்பட்டதால் தொடர்ந்து கோவையிலேயே அவர் இருந்துள்ளார். மீண்டும் ஏப்ரல் மாதம் பெங்களூருக்கு கணவர் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அவரது கணவர் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு பெங்களூருக்கு வந்திருந்த மகாராஷ்டிரா ஆசிரம சாமியாரை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது அப்பெண்ணிடம் தனிமையில் பேசிய சாமியார் தனது ஆசைகளை நிறைவேற்றினால் தான் உனக்கு குழந்தை பிறக்கும் என்றும் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் உன்னையும், உன் கணவரையும் பிரித்து விடுவேன் என சொன்னதாக கூறப்படுகின்றன. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண் தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

அப்போது அவரது கணவர் குருஜி சொல்படி நடந்து கொள் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே அப்பெண்ணின் நண்பர் ஒருவரின் மனைவி ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அவரும்  சாமியார் சொல்வதை கேட்டு நடக்காவிட்டால் குழந்தை பெற வாய்ப்பில்லை என்றும் கூறியிருக்கிறார். இதற்கு அந்த பெண்ணோ மறுப்பு தெரிவித்ற்றுக்கின்றார்.

இதை தொடர்ந்து குருஜி பிரபுதாநந்தாவின் ஆசைகளை நிறைவேற்றாவிட்டால் விவாகரத்து செய்து விடுவேன் என அப்பெண்ணின் கணவர் கார்த்திக் லட்சுமி நாராயணன் மிரட்டியதாக கூறப்படுகின்றன. மேலும் பிரதீபாவை கோவையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு விட்டு சென்று விட்டார். அதன் பின்னர் பெங்களூரில் உள்ள கணவரை சந்திக்க சென்ற போது  அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

குழந்தை வரம் வேண்டி பூஜைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட கொடுமை

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீபா தனது கணவர் கார்த்திக் லட்சுமி நாராயணன், சாமியார் நந்தா, கணவரின் நண்பர் மனைவி மீது பெங்களூர் மாரத்தஹள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லாததால் அவர் கோவைக்கு மீண்டும் திரும்பி வந்தார். தொடர்ந்து தனது கணவரிடம் போனில் பேச முயன்ற போது  உன்னுடன் வாழக்கூடாது என சுவாமிகள்  சொல்லிவிட்டார் என அந்த பெண்ணின் கணவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலே, அந்த பெண் பிரதீபா தனக்கு நேர்ந்த கொடுமைகளை புகாராக கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தந்துள்ளார். புகாரின் பேரில் கோவை அனைத்து மகளிர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ