spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்தலையை  துண்டித்து  ரவுடி  கொலை…!

தலையை  துண்டித்து  ரவுடி  கொலை…!

-

- Advertisement -

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர்ராஜ் (எ) கழுத்துவெட்டி சுந்தர்ராஜ்(33). திருமணமாகாதவர். பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, அடிதடி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

தலையை  துண்டித்து  ரவுடி  கொலை…!இவரது சித்தப்பா மணி பக்கத்து வீட்டில் அவரது  வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மணி தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு கட்டிலில் சுந்தர்ராஜ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

we-r-hiring

உடலுக்கு அருகில் தலை துண்டிக்கப்பட்டு தனியாக இருந்தது. அவரது உடலை பார்த்து மணி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கொலை நடந்த இரவு முன்னதாக நண்பர்களுடன் சுந்தர்ராஜ் மது அருந்தியுள்ளார்.

அவருக்கு போதை ஏறியதும் அரிவாளால் சரமாரி வெட்டி, கழுத்தை அறுத்து தலையை தனியாக துண்டித்து உடலின் அருகிலேயே  தலையை வைத்துவிட்டு நண்பர்கள் தப்பி சென்றது தெரியவந்தது. கடந்த 2022ல் கொத்தனார் ஜெயபால் என்பவரை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக சுந்தர்ராஜ் கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடந்து வருகிறது.

MUST READ