Homeசெய்திகள்க்ரைம்முன்னாள் டிஜிபி மனைவியிடம் மோசடி - சைபர் கிரைம் கும்பலின் செயல் அதிகரிப்பு

முன்னாள் டிஜிபி மனைவியிடம் மோசடி – சைபர் கிரைம் கும்பலின் செயல் அதிகரிப்பு

-

மும்பை போலீஸ் பேசுவதாக கூறி முன்னாள் டிஜிபி மனைவியிடம் சைபர் கிரைம் கும்பல் மோசடி

சென்னை தியாகராய நகர் கண்ணதாசன் தெருவில் வசிப்பவர் ஓய்வு பெற்ற டிஜிபி( expired) ஸ்ரீ பாலின் மனைவி டாக்டர் கமலி ஸ்ரீபால்(71).

கடந்த 24 ஆம் தேதி டாக்டர் கமலியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் மும்பையில் இருந்து
TRAI அதிகாரி பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அப்போது சட்டவிரோதமான செயல்களுக்கு இந்த செல்போன் எண் பயன்படுத்தப்படுவதாகவும்,
அதனால் இரண்டு மணி நேரத்தில் உங்கள் செல்போன் எண்ணை பிளாக் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் மற்றொரு செல்போன் எண்ணில் இருந்து பேசிய நபர் Mumbai Ardheri Police எனவும் உங்களுடைய செல்போன் எண் மற்றும் ஆதார் கார்டு பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதற்காக ரூபாய் 90 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தால், உங்களுடைய பண பரிவர்த்தனை விவரங்களை சரி பார்த்து விட்டு மீண்டும் உங்கள் வங்கி கணக்கில் திருப்பி செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

பயந்து போன டாக்டர் கமலி ஜிபே மூலம் 90 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பிறகு இது தொடர்பாக குடும்பத்தினரிடம் தெரிவித்த போது இது சைபர் கிரைம் மோசடி கும்பலின் கைவரிசை என அவருக்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சைபர் கிரைம் மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

MUST READ