spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்இருட்டுக்கடை அல்வா விவகாரம் - லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் - கனிஷ்கா போலீசில்...

இருட்டுக்கடை அல்வா விவகாரம் – லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் – கனிஷ்கா போலீசில் புகார் மனு

-

- Advertisement -

நெல்லை இருட்டுக்கடை அல்வா நிறுவன உரிமையாளர் மகள் வரதட்சணை புகார் விவகாரத்தில் மணமகன் வெளிநாடு தப்பிச்செல்ல இருப்பதால் லுக் அவுட் நோட்டீஸ் வழங்க கோரி வழக்கறிஞர்கள் போலீசில் புகார் மனு அளித்துள்ளனா்.இருட்டுக்கடை அல்வா விவகாரம் - லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் - கனிஷ்கா போலீசில் புகார் மனுநெல்லையில் உலகப் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையை நடத்தி வருபவர் கவிதா சிங். இவரது மகள் கனிஷ்கா. இவருக்கும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் மகன் பல்ராம் சிங்கிற்கும் பிப்ரவரி 2-ஆம் தேதி நெல்லையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதையடுத்து திருமணமான 40 நாட்களில் கனிஷ்கா தனது கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், ரூ .1.5 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த காரை வரதட்சணையாக கேட்பதாகவும், இருட்டுக்கடை அல்வா நிறுவனத்தின் உரிமையை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுகின்றனர் என கனிஷ்கா மற்றும் அவரது தாய் கவிதா சிங் ஆகியோர் சில தினங்களுக்கு முன் நெல்லை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கோவையில் கனிஷ்காவின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து மணமகன் பல்ராம் சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கனிஷ்கா கொடுத்த புகார் அடிப்படையில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் ஏப்ரல் 21  காலை 11:00 மணிக்கு பல்ராம் சிங் தரப்பில் நேரில் ஆஜராக வேண்டும் என 2 நாட்களுக்கு முன்பு போலீசார் சம்மன் அனுப்பினர்.

we-r-hiring

இதையடுத்து ஏப்ரல் 21,  காலை கனிஷ்கா தரப்பிலான வழக்கறிஞர்கள் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் குவிந்தனர். 11 மணி வரை பல்ராம் சிங் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. காலை 11:30 மணிக்கு பல்ராம் சிங் தரப்பில் வழக்கறிஞர் பரிமளம் என்பவரின் உதவியாளர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி பல்ராம் சிங் தரப்பினர் தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக 10 நாட்கள் அவகாசம் கேட்டு காவல் நிலையத்தில் அவகாசம் கேட்டு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். காவல்துறையினர் உயர் அதிகாரியிடம் பேசி பதில் தருவதாக தெரிவித்திருப்பதாகவும் மேலும் 10 தினங்களுக்குள் ஆஜராக வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஏப்ரல் 22 ஆம் தேதி  இருட்டு கடை அல்வா கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா தரப்பில் தனது கணவர் பல்ராம் சிங்  வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதால், அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்க வேண்டும் என நெல்லை மாநகர  காவல்துறை துணை ஆணையாளர் வினோத்திடம் கனிஷ்கா தரப்பில் அவரது வழக்கறிஞர் லட்சுமணர் ரமேஷ் புகார் மனு வழங்கினார்.

இதற்கு, காவல்துறையினா் தனி மனிதனின் குடும்பப் பிரச்சனைக்காக ஒருவருக்கு நோட்டீஸ் வழங்க முடியாது. முதல் கட்டமாக இந்த விவகாரத்தில்  காவல்துறை மூலம் நேரில் ஆஜராக வேண்டும் என கோவை சேர்ந்த பல்ராம் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர் தரப்பில் கால அவகாசம் கேட்டுள்ளனர். தொடர்ந்து வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்த அவரை மீண்டும் பல்ராம் சிங்கை ஆஜராக வருமாறு அறிவுறுத்துவோம். அவர் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று விளக்கம் அளித்துள்ளனா்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இளைஞன் கொடூரமாகக் கொலை! கான்ஸ்டபிள் கைது

 

MUST READ