தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைப்பட்டு 80 சவரண் நகை 38 லட்சம் ரொக்க பணம் கொடுத்து ஏமாந்த மருத்துவரின் மனைவி. நகை பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த மூன்று பெண்கள் மீது மருத்துவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு மூன்று பெண்களை வலைவீச்சு தேடி வருகின்றனர்.திருவள்ளூர் காந்தி சாலை சேர்ந்தவர் புவனேஸ்வரி என்ற யுவஸ்ரீ -31 இவருக்கும் மருத்துவர் விக்னேஷ் என்பருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது யுவஸ்ரீக்கு தாய் வீட்டு சீதனமாக 140 சவரன் தங்க நகை சுமார் 7 கிலோ வெள்ளிப் பொருட்கள் அவருக்கு சீதனமாக கொடுத்துள்ளனர், கணவர் விக்னேஷ் போரூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார், புவனேஸ்வரி என்ற யுவஸ்ரீ மாமியார் ஷர்மிளா என்பவர் பள்ளி மாணவர்களுக்கு தனது வீட்டில் மாலை நேரத்தில் டியூஷன் நடத்தி வருவதால் உறவினரான சரிதா குழந்தைகளும் அந்த டியூஷனில் பயின்று வந்துள்ளனர்.
தினம் குழந்தைகளை டியூஷனுக்கு அனுப்பி வைத்து மாலை அழைத்து வருவதாக சரிதா இருந்து வந்துள்ளார். அப்போது யுவஸ்ரீ அவருடைய மாமியார் சர்மிளாவிடம் குழந்தைகளை டியூஷனில் இருந்து அழைத்து வர செல்லும்போது அதிக நேரம் அவர்களிடம் தினந்தோறும் பேசி பழகி வந்துள்ளார், அப்போது சரிதா டியூஷனில் சொற்ப வருமானம் கிடைக்கும் என்றும் தனது தோழி ஒருவர் தங்கத்தில் முதலீடு செய்து மாதம் 3 லட்சம் வரை லாபம் பார்த்து வருவதாகவும் யுவஸ்ரீ மாமியார் சர்மிளாவிடம் சரிதா ஆசை வார்த்தை கூறியுள்ளார்,

கடந்த 2022ஆம் தேதி அக்டோபர் மாதம் சரிதா தனது தோழிகளான நான்சி என்ற சுந்தரி, ஷீபா என்ற குபேந்தரி ஆகிய மூவரும் வீட்டிற்கு அழைத்துச் சென்று யுவஸ்ரீ மாமியாரான சர்மிளாவை சந்தித்து பேசியுள்ளாா். அப்போது ஷீபா என்ற குபேந்தரி தான் தங்கம் வாங்கி விற்பனை செய்து வருவதாகவும் அதன் மூலமாக அதிக லாபம் சம்பாதித்து வருவதாகவும் தங்கத்தில் முதலீடு செய்தால் டியூஷனில் சொற்ப வருமானம் பார்ப்பதை விட பல மடங்கு லாபம் எடுக்கலாம் என கூறியுள்ளார்.
இதை மாமியார் ஷர்மிளா மற்றும் மருமகளான யுவஸ்ரீயிடம் கூறியுள்ளார், யுவஸ்ரீ தாய்வீட்டில் தனக்கு சீதனமாக கொடுத்த 140 சவரண் நகையை முதல் கட்டமாக 13 சவரன் நகையும் இரண்டாவது கட்டமாக 67 சவரன் நகையும் என 80 சவரண் நகை , அதேபோன்று 10 லட்சம் ரூபாய் முதல் கட்டமாகவும் இரண்டாவது கட்டமாகவும் 10 லட்ச ரூபாய் என 80 சவரன் நகை 38 லட்சம் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வதற்காக கொடுத்துள்ளார்,
ஆனால் பணம் நகை கொடுத்ததற்கான முதலீடு தொகை வராததால் யுவஸ்ரீ மாமியார் ஷர்மிளா இருவரும் சுந்தரியிடமும் கேட்டுள்ளனர். ஆனால் கொடுத்த நகையும் பணத்தையும் திருப்பித் தராமல் மூவரும் ஏமாற்றி வந்துள்ளனர். மோசடி செய்ததை உணர்ந்த யுவஸ்ரீ பணம் நகையை பெற்றுக்கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் மூவர் மீது நடவடிக்கை எடுத்து பணம் நகை மீட்டு தரக்கோரி யுவஸ்ரீ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
மாவட்டக் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அத்தகைய புகாரை திருவள்ளூர் நகர போலீஸரிடம் அனுப்பி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். திருவள்ளூர் டவுன் போலீசார் மோசடியில் ஈடுபட்ட நான்சி என்ற சுந்தரி-30 , சீபா என்ற குபேந்தரி -32 , சரிதா -30 ஆகிய மூவர் மீது வழக்குப்பதிவு செய்து மோசடி ஈடுபட்டு தலைமறைவாகி உள்ள மூன்று பெண்களையும் தேடி வருகின்றனர்.
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைப்பட்டு 80 சவரன் நகை 38 லட்சம் ரொக்க பணம் மருத்துவர் மனைவியை மூன்று பெண்கள் சேர்ந்து மோசடி செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது