spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மனைவியின் நடத்தையில் சந்தேகம்…ஆட்டோ ஓட்டுனரின் வெறிச் செயல்!

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…ஆட்டோ ஓட்டுனரின் வெறிச் செயல்!

-

- Advertisement -

திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Doubts ,about, behavior , wife, auto driver's ,frenzy, crime, திருப்பத்தூர் மாவட்டம் ,திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் (53) இவரது இரண்டாவது மனைவி தீபா (வயது 35) இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ரமேஷ்க்கு நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பாவுசா நகரில் உள்ள ரமேஷின் தங்கையான வரலட்சுமி வீட்டிற்கு தூங்குவதற்காக தீபா சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திரும்பவும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியால் தீபாவை சரமாரியாக உடலில் பல்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி  சென்றுள்ளார்.

we-r-hiring

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் உட்கொட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷை போலீசார் கைது செய்தனர்.

கண்ணை மறைத்த கள்ளக்காதல்: திட்டமிட்டு நாடக விபத்து- கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!

MUST READ