கோவை டவுன்ஹால் பகுதியில் குடியரசுத் துணைத் தலைவருக்கான, போலீசாரின் பாதுகாப்பு தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கிய இரண்டு போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வந்தார். அப்போது டவுன்ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக குடியரசுத் துணைத் தலைவர் வருகையை ஒட்டி அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசாரின் பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அப்போது திடீரென மணிக்கூண்டு நோக்கி ஒருவழிப்பாதையில் போலீசாரின் தடையை மீறி ஹெல்மெட் அணியாமல் போதை இளைஞர்கள் இரண்டு பேர் அதிவேகமாக அவ்வழியாகச் சென்றனர்.
அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போதும் சிக்காமல் தப்பிச்சென்றனர். அப்போது புனித மைக்கேல் பள்ளி அருகே அதிவேகமாக சென்ற இளைஞர்களின் வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக ஓடி வந்து இருவரையும் பிடித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் போதையில் அதிவேகமாக போலீசாரின் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நபர்கள் கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஆனீஷ் ரகுமான் மற்றும் ஆஷிக் என்பது தெரியவந்ததுள்ளது. இவர்கள் மீது பல்வேறு போதை பொருட்கள் விற்பனை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 தரும் மோடி! நிதிஷ் கட்சி சோலி இதோட காலி! பத்திரிகையாளர் ஆர்.மணி பேட்டி!


