spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை

வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை

-

- Advertisement -

ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டில் 7.5 பவுன் நகை மற்றும் 1.20 லட்சம் ரூபாய் கொள்ளை. 300 மீட்டர் துரத்திச்சென்றும் தப்பிய கொள்ளையன். வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகரம்

சேலம், வாழப்பாடி அருகே ஓய்வு பெற்ற தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து 7.5 பவுன் நகை, 1.20 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்து தப்பியோடிய ஒருவனை 300 மீட்டர் தூரம் துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை.

வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை

we-r-hiring

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள செல்லியம்மன் நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி(64). ஓய்வு பெற்ற தாசில்தார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு ரமேஷ் என்ற மகனும், ரம்யா என்ற மகளும் உள்ளனர்.

ரமேஷ் இன்ஜினியரிங் முடித்து வீட்டில் இருந்து வருகிறார். ரம்யாவுக்கு திருமணமாகி திருப்பத்தூரில் வசித்து வருகிறார். இவர் சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை செய்து வருகிறார். மகள் ரம்யா கர்ப்பமாக இருப்பதால் விஜயலட்சுமி திருப்பத்தூரில் மகளுடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 10.30 -க்கு சின்னசாமியும், ரமேசும் வீட்டை பூட்டி விட்டு காரில் திருப்பத்தூருக்கு புறப்பட்டுச்சென்றனர். இன்று அதிகாலை 3.30-க்கு விஜயலட்சுமியை அழைத்துக்கொண்டு வாழப்பாடி திரும்பினர்.

வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை

அப்போது வீட்டின் கேட் மற்றும் கதவு திறந்து கிடந்தது. இதனிடையே கார் வந்ததை பார்த்து வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் வெளியே ஓடி வந்து காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்த ரமேஷ் மற்றும் சின்னசாமி திருடன், திருடன் என சத்தம் போட்டபடி விரட்டிச் சென்றனர். சுமார் 300 மீட்டர் தூரம் துரத்திச்சென்றும் மர்ம நபரை பிடிக்க முடியவில்லை.

பின்னர் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறிகிடந்தன. அதில் இருந்த 7.5 பவுன் நகை, 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி அரைஞாண்கொடி, 1.20 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போய் இருந்தது.

இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், எஸ்ஐ கோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

வாழப்பாடியில் இன்று அதிகாலை துணிகர கொள்ளை

தப்பி ஓடிய கொள்ளையன் விட்டுச்சென்ற செருப்பு, ஸ்வெட்டர், கதவை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ஒரே பைக்கில் 3 பேர் வந்து கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

MUST READ