- Advertisement -
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே தோட்டத்திற்கு தண்ணீா் பாய்ச்சியபோது மின்சாரம் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா் .

மானூா் அருகேயுள்ள திருக்குப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (62). இவா், தனது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்சுவதற்காக வழக்கம்போல் மின்மோட்டாரை இயக்கியபோது அவா் மீது மின்சாரம் பாயந்தது.
இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.