Homeசெய்திகள்க்ரைம்கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு

கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு

-

- Advertisement -
kadalkanni

சென்னை தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லெனின் (வயது-36) பிரபல ரவுடியான இவர் மீது ஆறுக்கு மேற்பட்ட கொலை வழக்குகள், கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் என இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன,அதுமட்டு மின்றி ஆறு முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கும் சென்று வந்துள்ளார். தாம்பரம் அருகே 20,கிலோ கஞ்சாவுடன் போலீசாரிடம் சிக்கிய பிரபல ரவுடி லெனின் தப்ப முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டது

கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு

ஒவ்வொரு முறையும் சிறைக்கு சென்று வந்தவுடன் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது பணம் தர மறுத்தால் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்வதாக மிரட்டி, லட்சக் கணக்கில் பணம் பறித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளான்,மேலும் தனக்கு பக்க பலமாக பல ரவுடிகளை சேர்ந்து கொண்டு, மாபியா கும்பல் போல செயல் பட்டு தாம்பரம் அதன் சுற்று வட்டாரத்தையே உலுக்கி வந்துள்ளார், அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவல் துறைக்கு சவால் விடும் வகையிலும் கத்தியுடன் பெதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பல ரீல்ஸ்களையும் வெளிவிட்டு வந்தார்.

கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தாம்பரம் இணை ஆணையாளர் பவன் குமார் உடனே சோமங்கலம் ஏ.சி இளஞ்செழியன் தலைமையில் எட்டு பேர் கொண்ட தனி படை அமைத்து கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாக தேடி வந்த
நிலையில் ரவுடி லெனின், சோமங்கலம் காட்டுப் பகுதியில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இந்த தகவலின் அடிப்படையில் காட்டுப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அடர்ந்த மரங்களின் மத்தியில் தனது கூட்டாளியான இரண்டு பேருடன் அமர்ந்து தொழிலைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்.

இப்பொழுது மூன்று பேரையும் போலீசார் பிடிக்க முயற்சி செய்தபோது இரண்டு பேர் மட்டும் போலீசாரிடம் வகையாக சிக்கினார்கள் ஆனால் லெனின் மட்டும் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு காட்டுப் பகுதிக்குள் ஓடினான் அப்பொழுது மரத்தின் வேர் காலில் தட்டுப் பட்டு கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, உடனடியாக அவரை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர், மருத்துவர் கால் முறிவு ஏற்பட்ட லெனினுக்கு காலில் மாவு கட்டு போட்டனர்.

கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு

மேலும் கூட்டாளிகள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது நடுவீரன்பட்டு பகுதியைச் சேர்ந்த நரேஷ்பாபு (வயது-29) மாடம்பாக்கத்தை சேர்ந்த பரத் (வயது-28) என்பது தெரிய வந்தது மேலும் போலீசார் பாணியில் விசாரணை தொடங்கிய போது லெனின் தான் கஞ்சா விற்பனையை பெரிய தொழிலாக செய்யலாம் எனக் கூறி பேசுவதற்காக காட்டுப் பகுதிக்கு வர வைத்தார் என கூறினார்கள்…

கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு

முதற்கட்டமாக 20,கிலோ கஞ்சாவை விற்பனைக்காக காரில் வைத்திருப்பதாக தெரிவித்ததும் கஞ்சா மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்து லெனின் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனர்.பல கொலைகள் செய்து தொழிலதிபரை மிரட்டி பிரபல ரவுடியாகி தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வலம் வந்த நிலையில் சமீப நாட்களாக ரவுடியின் அட்டகாசத்தை அடக்கி, என்கவுண்டர் வரை சென்று ரவுடிச சாம்ராஜ்யத்தை ஓடிக்கி வரும் போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளை பார்த்ததால் பிரபல ரவுடியாக வலம் வந்த லெனின் ரவுடிசத்தை விட்டு விட்டு பண தேவைக்காக கஞ்சா வியாபாரியாக மாறிய போது மீண்டும் போலீசாரிடம் சிக்கியதாக குற்றவாளின் பகீர் வாக்குமூலம்….

ரூ.6.5 கோடி மதிப்பிலான யானை தந்த பொம்மைகளை விற்பனை செய்ய முயற்சி… 12 பேர் கும்பலை பொடி வைத்து பிடித்த வனத்துறையினர்! 

MUST READ