spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடிய ஐந்து நபர்கள் கைது!

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடிய ஐந்து நபர்கள் கைது!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சொக்கம்பட்டி கிராமத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடியதாக ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடிய ஐந்து நபர்கள் கைது!

we-r-hiring

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யைச் சேர்ந்தவர் அழகப்பன். இவர் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சொக்கம்பட்டி, வலைச்சேரிபட்டி, சேக்கிபட்டி, பட்டூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை பதிக்கும் ஒப்பந்த பணியை எடுத்து வேலை செய்து வருகிறார்.  இவரிடம் கரூர் ரஞ்சித் குமார், பட்டூரைச் சேர்ந்த சங்கர்தாஸ்,சரவணன், நத்தத்தைச் சேர்ந்த சிவா மற்றும் சக்திவேல் ஆகியோர் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் குழாய்கள் திருடு போவது தொடர்கதையாக இருந்து வந்த நிலையில் இது குறித்து அழகப்பன் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை திருடிய ஐந்து நபர்கள் கைது!

 

இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட கொட்டாம்பட்டி போலீசார் அழகப்பனிடம் பணியில் சேர்ந்த மேற்கண்ட ஐந்து நபர்களும் சேர்ந்து 300 எண்ணிக்கையிலான சுமார் 40 லட்சம் மதிப்புடைய பைப்புகளை திருடியது தெரியவந்துள்ளது.இதனை அடுத்து ஐந்து நபர்களையும் கைது செய்துள்ள போலீசார் இதற்கு மூளையாக செயல்பட்ட யோகேஸ்வரன் மற்றும் சிவா ஆகியோரை தேடி வருகின்றனர்.

MUST READ