உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு இயக்குநராக இணை இயக்குநர் கார்த்திகேயன் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். OUR GREEN INDIA SOAP FACTORY என்கிற சோப்பு தயாரிக்கும் நிறுவனம் மூலம் இயற்கையாக தயாரிக்கப்படும் சோப் தயார் செய்ய வேண்டி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இயங்கி வரும் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்தினை பரிசீலனை செய்து மேல் நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
25 ஆயிரம் முன் பணம் ஆக கொடுத்தால் தான் உங்களுடைய கோப்புகள் பரிசோதனை செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சரவணன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சென்னை மாவட்ட பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பொறிவைப்பு நடவடிக்கையின் மூலம் இணை இயக்குநர் கார்த்திகேயனுக்கு சரவணன் மூலம் 25 ஆயிரம் ரூபாய் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சரவணனின் கொடுத்த லஞ்ச பணத்தை வைத்திருந்த இணை இயக்குநர் கார்த்திகேயனை கைது செய்தனர்.