spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மோசடியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி கைது…

மோசடியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி கைது…

-

- Advertisement -

முதியவரிடம் பழகிய நபர் போல் பேசி 50 ஆயிரம் பணம் ஏமாற்றிய ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனா்.மோசடியில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமி கைது…சென்னை அண்ணாநகர் T பிளாக் எட்டாவது தெருவில் வசித்து வருபவர் உமா சங்கர் (72). இவர் இந்தியன் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று மதியம் சென்னை அண்ணா நகர் 5வது மெயின் ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர் உமாசங்கரிடம்  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பின்னர் அந்த  நபர் உமாசங்கரிடம் தானும் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளதாகவும் நீங்கள் பணிபுரிந்த அதே அலுவலகத்தில் தான்  பணிபுரிந்ததாகவும் பின்பு பதவி உயர்வு பணி மாறுதலில் வேறு அலுவலகத்திற்கு சென்றுவிட்டதாகவும் அதனால் தன்னை தற்போது உங்களுக்கு அடையாளம் காண முடியவில்லை என தனது பேச்சை தொடங்கியுள்ளார்.

we-r-hiring

மேலும் பேசிய அந்த நபர்  உடன் வேலை செய்த நபர்கள் குறித்து எல்லாம் பேசி உள்ளார். அப்பொழுது நம்மோடு அலுவலகத்தில் வேலை செய்த நபர் ஒருவர் பேச ஆரம்பித்து அந்த நபருக்கு தற்பொழுது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு தற்பொழுது பண உதவி தேவைப்படுகிறது. நம்மை போன்ற உடன் வேலை செய்த நபர்கள் அவருக்கு கொடுத்து உதவ வேண்டும் எனவும் மேலும் தன்னுடைய பங்கிற்கு தொகை கொண்டவர் தெரிவித்துள்ளார். உங்களால் முடிந்த உதவி ஏதேனும் அவருக்கு கொடுத்து உதவுங்கள் என கேட்டுள்ளார்.

இதனை நம்பிய உமா சங்கர் அந்த நபரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொடுத்துள்ளார். பதிலுக்கு அந்த நபர் ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து இந்த எண்ணில் அவரை தொடர்பு கொண்டு பேசலாம் எனவும் அவருக்கும் உங்களுடைய தொலைபேசி எண்ணை அவருக்கு நீங்கள் செய்யும் உதவி பெரிய உதவியாக அமையும் என கூறி விட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.

இதனையடுத்து உமா சங்கர் நடந்த சம்பவம் குறித்து தனது வீட்டில் குடும்பத்தாரிடம் கூறிய பொழுது அவர்கள் எல்லோரும் யாரோ உங்களை ஏமாற்றிவிட்டார்கள் என கூறி நபர் கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டு பாருங்கள் என அறிவித்துள்ளனர். உமா சங்கர் அந்த நபர் கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொழுது சுவிச் ஆப் என வந்துள்ளது. இதனை அடுத்து உமா சங்கர் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து வேதனை அடைந்தார். பின்பு நடந்த சம்பவம் குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணா நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முதற்கட்டமாக அண்ணாநகர் பகுதியில் உமா சங்கர் ஹோட்டல் ஒன்றை தனது புகாரில் குறிப்பிட்டிருந்ததை அடுத்து ஒரு கட்டமாக ஹோட்டல் மற்றும் அதன் அருகே உயர்ந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி  குறிப்பிட்ட  நேரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உமா சங்கர் இடம்  பேசி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமற்றிய நபர் சென்ற இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி பின்பு உமாசங்கரனும் புகைப்படம் ஒன்றை காட்டி அதில் ஏமாற்றிய நபர் என ஒருவரை உறுதி செய்தனர்.

பின்பு அந்த நபரின் புகைப்படங்கள் ஆதாரமாக வைத்துக் கொண்டு ஏமாற்றிவிட்டு சென்ற நபரை தீவிரமாக தேடினர். அப்போது நியூ ஆவடி ரோட்டில் அண்ணா நகர் தேடப்படும் நபர் நடந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அண்ணா நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அருள்மொழி வர்மன் (64) என்பதும் இவர் அந்த பகுதியில் 79வது வார்டு எம் ஜி ஆர் மன்ற  பொறுப்பாளர் என்பதும் தெரியவந்தது.

பின்பு அருள்மொழிவர்மன் குறித்து விசாரணை செய்த பொழுது இந்த நபர் பல்வேறு நபர்களிடம் குறிப்பாக முதியவர்களிடம் இது போன்று பல மோசடிகளில் ஈடுபட்டு ஏமாற்றி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர் என்பதை தவறாக பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நபர்களிடம் ஏமாற்றி பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் முதியவர் உமாசங்கரிடம் பறித்த 50,000 பணத்தில் 47 ஆயிரத்து 500 ரூபாய் போலீசார் அருள்மொழிவர்மனிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அருள்மொழிவர்மன் மீது அண்ணா நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு உடன் பழகியவர்கள் போன்று கதைகளை உருவாக்கி நம்பும்படியாக கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் இது போன்ற நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 72 வயது முதியவர் உமாசங்கரை ஏமாற்றி ஐம்பதாயிரம் பணம் பதித்த நபரை அண்ணா நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராக்கெட் வேகத்தில் உயா்ந்த தங்கம்! நகைப்பிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ச்சி!

MUST READ