spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆன்லைன் மூலம் 1.43 கோடி மோசடி… வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது…

ஆன்லைன் மூலம் 1.43 கோடி மோசடி… வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது…

-

- Advertisement -

ஆன்லைன் டிரேடிங் மூலம் 1.43 கோடி பணம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது.ஆன்லைன் மூலம் 1.43 கோடி மோசடி… வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது…சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கார்த்திக்(36) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் சமூக வலைத்தளத்தில் வந்த ஆன்லைன் முதலீடு வர்த்தக விளம்பரத்தை பார்த்து, அவர்களை தொடர்பு கொண்டு whatsapp குழு ஒன்றில் இணைந்துள்ளார். அந்த வாட்ஸ் அப் குழுவில் இருந்த நபர்கள் அனுப்பிய லிங்குகளை பயன்படுத்தி முதலீடு செயலி ஒன்றை தனது மொபைல் போனில் டவுன்லோட் செய்துள்ளார். வாட்ஸ் அப் குழுவில் இருந்த நபர்கள் டவுன்லோட் செய்யப்பட்ட செயலியில் முதலீடு செய்தால் அதிக பணம் லாபம் கிடைக்கும் எனக் கூறி நம்ப வைத்துள்ளனர். இதனை நம்பிய கார்த்திக் வாட்ஸ் அப் குழுவில் இருந்த நபர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பல தேதிகளில் சுமார் 1 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 211 ரூபாய் பணத்தை அந்த செயலில் முதலீடு செய்துள்ளார்.

கார்த்திகை நம்ப வைப்பதற்காக அந்த செயலியில் அவர் செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்துள்ளது போலவும், அதேபோல் செலுத்திய பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது போலவும் எடிட் செய்து காண்பித்துள்ளனர். பின்பு, கார்த்திக் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயற்சித்த போது அவரால் எளிதில் எடுக்க முடியாமல் போனது. இதுகுறித்து whatsapp குழுவில் இருந்த நபர்களிடம் கார்த்திக் விசாரித்த பொழுது அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி மீண்டும் பணம் செலுத்தும் படியும் இன்னும் கூடுதலாக பணம் செலுத்தும் போது இன்னும் கூடுதலாக லாபம் கிடைக்கும் எனக் கூறியும் அப்பொழுது உங்கள் பணம் வந்துவிடும் எனவும் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர்.

we-r-hiring

முதலீடு செய்த பணத்தை தனது தேவைக்கு கூட எடுக்க முடியாத நிலையில் தவித்த கார்த்திக் பின்பு அந்த நபர்கள் தன்னை ஏமாற்றி உள்ளனர் என்பதை உணர்ந்து இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த விவரங்களை புகாராக அளித்தார். கார்த்திக் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய கூட்டுறவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்பு whatsapp குழுவில் பேசிய நபர்களின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு போலீசார் பேச முற்பட்ட பொழுது அவர்கள் சுதாரித்துக் கொண்டு கார்த்திகை ஏமாற்ற பயன்படுத்திய அந்த தொலைபேசி எண்ணை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி உள்ளனர்.

பின்பு தொலைபேசி எண்ணை கொண்டு சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் சூர்யா, சீனிவாசன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் நுங்கம்பாக்கத்தில் இருப்பதை கண்டறிந்த போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு நன்கு அறிமுகமான சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள கோடக் மகேந்திரா தனியார் வங்கி கிளையின் முன்னாள் மேலாளர் சேஷாத்திரி எத்திராஜ் என்பவர் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டு கார்த்திக் பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்து மோசடிக்கு உதவியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து சைபர் கிரைம் போலீசார் சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் வங்கி மேலாளர் சேஷாத்திரி எத்திராஜ் (43) என்பவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் விசாரணைக்கு பின்னர் சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்ட  நடவடிக்கை எடுத்தனர்.

பைக் மீது பேருந்து மோதி விபத்து…20 பேர் பலி…

MUST READ