கிண்டியிலிருந்து கோயம்பேடுக்கும் கோயம்பேட்டிலிருந்து கிண்டிக்கும் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், சாலையில் நெருப்பு பறக்க வாகன பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனா்.தீபாவளி பண்டிகையொட்டி சென்னையிலிருந்து பெரும்பான்மையான மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்துள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட இளைஞர்கள், நேற்று இரவு 1:30 மணி அளவில் கிண்டியில் இருந்து கோயம்பேடு, கோயம்பேட்டில் இருந்து கிண்டி என மீண்டும் மீண்டும் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட முறை கோயம்பேடு 100 அடி சாலையில் இருபுறமும் வாகன பந்தயத்தில் ஈடுபட்டனர். சாலையில் நெருப்பு பறக்க சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் விதமாக சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பயந்து சாலையில் தங்களது வாகனங்களை ஓரங்கட்டிய நிகழ்வு அரங்கேறியது.
சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை கண்டு பயந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் இரவு 2:00 மணியளவில் வடபழனி மேம்பாலத்தில் நான்கு முனைகளிலும் போலீசார் பேரிக்காடு அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் வாகன பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடித்தனர். வாகன பந்தயத்தில் ஈடுபட்ட ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை கீழே போட்டுவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்யும் போது போலீசார் அவர்களை துரத்தி துரத்தி பிடித்தனர். சிக்கிய இரண்டு இளைஞர்களையும் வடபழனி போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் கிண்டியில் இருந்து கோயம்பேடு நோக்கியும், கோயம்பேட்டில் இருந்து கிண்டி நோக்கியும் சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பார்ப்பதற்கே பயத்தை ஏற்படும் விதமாக பைக் ரேஸில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.மேலும், வடபழனி மேம்பாலத்தில் பேரிக்காடு அமைத்து பைக் ரேஸ் ஈடுபட்ட இளைஞர்களை துரத்தி துரத்தி போலீசார் பிடிக்கும் காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, போலீசார் ஒருபுறம் சோதனையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது, போலீசாருக்கு சவால் விடும் விதமாக சாலையில் யூ-டர்ன் அடித்து மறுபுற சாலையில் வேண்டுமென்றே மீண்டும் பைக் ரேஸில் ஈடுப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட இரண்டு இளைஞர்களிடமும் வாகன பந்தயத்தில் ஈடுபட்ட மற்ற இளைஞர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…
