பள்ளிச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரத்தில் அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீ என்ற ஸ்ரீகண்டன்(54). அகில இந்திய இந்து மகா சபா தலைவர். கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் ஒருவர் இவரது வீட்டில் பணியாற்றி வந்தார். அந்த பெண்ணுக்கும் கோடம்பாக்கம் ஸ்ரீக்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் பள்ளிச் சிறுமியான தனது சகோதரர் மகளையும் கோடம்பாக்கம் ஸ்ரீ வீட்டுக்கு அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார். கோடம்பாக்கம் ஸ்ரீ அந்தச் சிறுமி மீது விருப்பம் கொண்டாா். இதை சிறுமியின் அத்தையிடம் கூறியுள்ளார்.
அவரும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கானாத்தூர் அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு வீட்டில் மூன்று முறை சிறுமியை கோடம்பாக்கம் ஸ்ரீ பாலியல் வன்புணர்வு செய்ய உடந்தையாக இருந்துள்ளார். சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி வேலூரில் வசிக்கும் தனது தாயாரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் தியாகராய நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து சிறுமியின் அத்தை, அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ ஆகிய இருவரையும் கைது செய்தனர். தன்னுடைய அமைப்பில் மகளிர் அணி பொறுப்பாளராக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கடந்த 2020 ஆம் ஆண்டு கோடம்பாக்கம் ஸ்ரீ கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷை மிரட்டி நிலத்தை அபகரித்த வழக்கில் 2021-ம் ஆண்டு சி பி சிஐ டி போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!