spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நிலமோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது….

நிலமோசடி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் கைது….

-

- Advertisement -

ரூ.3 கோடி மதிப்புள்ள  நிலத்தை  அபகரித்த வழக்கில்  5 ஆண்டுகள்  தலைமறைவாக இருந்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.நிலமோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் கைது….சென்னை,  ஐயப்பன் தாங்கல், மவுண்ட் பூந்தமல்லி டிரங்க் ரோடு, Prestige Bella Vista, Tower 15 D என்ற முகவரியில் வசித்து வரும் பரிமளா நாயகி என்பவர் சென்னை காவல் ஆணையாளரிடம்  கடந்த மே 2021 ஆம் ஆண்டு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சோழிங்கநல்லூர் தாலுக்கா, பள்ளிக்கரணை கிராமம், எல்.ஐ.சி. நகர் 5-வது மெயின்ரோட்டில் உள்ள தனக்க சொந்தமான சுமார் 6400 சதுரடி கொண்ட காலி மனையை விற்பனை செய்ய வில்லங்க சான்று பெற்று பார்த்ததில் நிலம் அபகரிக்கப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார் .

குறிப்பாக கூட்டாக சேர்ந்து கடந்த 2019-ம் வருடம் பரிமளா நாயகி போல ஆள்மாறாட்டம் செய்து  ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் இருவருக்கும் தலா 3200 சதுரடியாக பிரித்து பொது அதிகார பத்திரம் பதிவு செய்தது தெரிய வந்துள்ளது. பின்னர் போலியான பரிமளா நாயகி, குஷால் சந்த் என்பவருக்கு ரமேஷ் பொது அதிகாரம் பெற்ற 3200 சதுர அடி நிலத்தை கிரையம் செய்தும், அதனை குஷால் சந்த் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஹவுஸிங் பைனான்ஸில் அடமானம் வைத்து மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

we-r-hiring

சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான தனது சொத்தினை நில மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது  மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து,  தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வழக்கில் சம்மந்தப்பட்ட சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பைனான்ஸ் தொழில் செய்யும் ரமேஷ், சைதாப்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரேம்குமார் மற்றும் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் குஷால் சந்த் ஆகிய மூவர் ஏற்கெனவே கடந்த 2021-ம் வருடம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய நபரை  தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பல இடங்களுக்கு தன் இருப்பிடத்தை மாற்றி வசித்து வந்த சுமதி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுமதி விசாரணைக்குப் பின்னர் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்  அடைக்கப்பட்டார்.

இளம் பெண்ணிடம் பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்ட டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு பதிவு…

MUST READ