சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து தங்க திருட்டு தொடர்பாக முன்னாள் நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாா்.
சபரிமலையில் துவார பாலகர் சிலைகளில் போர்த்தப்பட்டிருந்த தங்கத்தகடுகளில் இருந்து தங்க திருட்டு தொடர்பாக இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் முன்னாள் தேவசம் நிர்வாக அதிகாரி முராரி பாபுவை கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் 10 மணியளவில் சங்கனாச்சேரியில் உள்ள அவரது வீட்டில் இருந்து அவரை காவலில் எடுத்து திருவனந்தபுரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உன்னிகிருஷ்ணா போத்தி கைது செய்யபப்ட்டுள்ளாா். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், சபரிமலையில் இருந்து தங்கத் தகடுகளை எடுத்துச் செல்வதற்கு தேவையான ஆவணங்களை முராரி பாபு வழங்கியதாக தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து முராரி பாபுவை இரண்டாவது குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இவரை ஏற்கனவே திருவதாங்கூர் தேவசம்போர்டு பணி இடைநீக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அப்போது சபரிமலை கோவிலில் நிர்வாக அதிகாரியாக இருந்த முராரி பாபு என்பவரை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!


