spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வாட்சப் மூலம் ரூ.24 லட்சம் சுருட்டிய கும்பல்….போலீசாரின் அதிரடி செயல்…

வாட்சப் மூலம் ரூ.24 லட்சம் சுருட்டிய கும்பல்….போலீசாரின் அதிரடி செயல்…

-

- Advertisement -

வாட்சப் அழைப்பு மூலம், டிஜிட்டல்  கைது  என்ற பெயரில், பணம் ரூ.24 லட்சம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை சைபைர் க்ரைம் போலீசார்  கைது செய்துள்ளனர்.வாட்சப் மூலம் ரூ.24 லட்சம் சுருட்டிய கும்பல்….போலீசாரின் அதிரடி செயல்…

சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 25.09.2025ம் தேதி சித்ரலேகா,(70) என்பவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத நபர் வாட்சப் வீடியோகாலில் பேசியுள்ளாா். சித்ரலேகாவின் ஆதார் எண் சதக்கான் என்பவரின் ஆள் கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், அதனால் அவரது செல்போன் எண்ணை முடக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளாா்.

we-r-hiring

தொடர்பு கொண்ட நபர் தன்னை காந்திநகர் காவல் நிலைய அதிகாரி மதன்குமார் என்று அறிமுகம் செய்து கொண்டார்.  சத்தரலேகாவின் ஆதார்கார்டு, உச்சநீதிமன்ற ஆணை ஆகியவற்றை காட்டி டிஜிட்டல் கைது செய்துள்ளதாக கூறினாா். மேலும் அந்த நபர், தங்கள் மீது விசாரணை நடக்கிறது, இதை குடும்பத்திடம் சொல்லக்கூடாது என மிரட்டி சித்ரலேகாவை நம்ப வைப்பதுள்ளாா். அவரைத் தொடர்ந்து மேலும் ஒருவர் சிபிஐ அதிகாரி என வீடியோ கால் செய்துள்ளனர்.

சத்தரலேகாவின் வங்கி கணக்கிலுள்ள இருப்பு தொகையை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பும் படியும் விசாரணை முடித்த பின் பணத்தை திரும்ப அனுப்புவதாக கூறியுள்ளனர். சத்தரலேகாவும் இதனை நம்பி கடந்த 22.09.2025ம் தேதி தனது மற்றும் தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்த மொத்த தொகை ரூ.24,00,000/-ஐ RTGS மூலமாக அனுப்பி வைத்துள்ளாா்.

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சித்ரலேகா, வடக்கு மண்டல சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தார்.

புகார் பெறப்பட்டதும், போலீசார் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள், பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்கள் உள்ளிட்ட விவரங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்தனர். அவர்களின் இயக்கம் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) திரு.பிரவேஷ்குமார், இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடக்கு மண்டல காவல் இணை ஆணையாளர் திரு.M.மனோகர், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, வடக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்குழுவினர், தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 1)தேஜாஸ் (20), மைசூர், 2)பிரணவ்(20) மைசூர், 3)முகமது சமீர் (21), மைசூர், ஆகிய 3 பேரையும் 17.11.2025  அன்று கர்நாடக மாநிலம் மைசூரில் வைத்து கைது செய்து, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 3 செல்போன்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும், விசாரணைக்குப்பின்னர், நேற்று (18.11.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்தக்கோரிய மனு…. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு…

MUST READ