spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்

சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – காவலில் உள்ள ஹரிஹரனை தனியாக வைத்து விடிய விடிய விசாரணை

சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளையும்  ஒருங்கிணைத்த வழக்கறிஞர் ஹரிஹரனை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். மவுண்ட் ஆயுதப் படை பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

we-r-hiring

50 லட்சம் பணம் யாராரிடம் இருந்தெல்லாம் வந்தது? எங்கெல்லாம் ரவுடிகள் சந்திப்பு நடந்தது? வேறு யாரெல்லாம் இந்த கொலையில் உடந்தை? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூவரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல எவ்வளவு பணம் பேரம் பேசப்பட்டது? பின்னணியில் உள்ள தாதாக்கள் குறித்து விசாரணை….தொடர்பு கொண்டு, ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான நபர்களை எப்படி ஒருங்கிணைத்து கொலையை எந்த பிசிரும் இல்லாமல் கச்சிதமாக செய்ய வேண்டும் என ஆலோசனைகளை அவ்வபோது சம்பவம் செந்தில் வழங்கியதாகவும் ஹரிஹரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்.

சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்வடகிழக்கு மாநிலங்களில் சம்பவம் செந்தில் எங்கெங்கு தங்குவார்? அதேபோல தரை வழியாக அடிக்கடி நேபாளம் சென்று தங்குவதாக கூறப்படும் சம்பவம் செந்தில் அங்கிருந்தபடியே, சமூக விரோத செயல்களுக்கான சதித்திட்ட ஆலோசனைகளை எப்படி வழங்குவார்? என ஹரிஹரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

சம்பவம் செந்திலுக்கு பக்கபலமாக இருக்கும் அரசியல் பெரும்புள்ளிகள்,  தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள், தற்போது பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் குறித்தும்  விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

MUST READ