spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு - இளைஞர் போக்சோவில் கைது!

குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கடத்தப்பட்ட 17 வயது சிறுமியை ஒசூரில் வைத்து மீட்ட போலீசார், அவரை கடத்தி சென்ற 18 வயது இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

we-r-hiring

தூத்துக்குடி மாவட்டம் எள்ளுவிளை குதிரைமொழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 3 மாதங்களாக குமரிமாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி ஒரு மகளிர் பயிற்சி நிலையத்தில் தையல் பயின்று வந்தார். இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி காலையில் தையல் பயிற்சிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுமியின் பாட்டி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தார்.

இந்தநிலையில் சிறுமி ஒசூரில் 18 வயதுடைய ஒரு வாலிபருடன் தங்கியிருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் ஒசூர் விரைந்து சென்று சிறுமி மற்றும் வாலிபரை பிடித்து குளச்சல் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் காரங்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஒசூரில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இவர் மாணவியுடன் சமூக வலைத்தளம் மூலம் பழகி ஒசூருக்கு கடத்தி
சென்றுள்ளார். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

MUST READ