சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசா நேரில் ஆஜர்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ள ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பாக சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. ஆ.ராசா உள்ளிட்டோருக்கு வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
அடுத்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி ஆ.ராசா தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு.