spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

-

- Advertisement -

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

திருமங்கலம் மகளிர் போலீசில் குடும்ப பிரச்சனை காரணமாக வந்தவர்களிடம் , நகையை வாங்கி அடகு வைத்த பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

we-r-hiring

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கீதா. இவரது கணவர் சரவணன் திருநகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூரில் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அபிநயா (30), சென்னையில் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.
இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து திருமங்கலம் மகளிர் போலீசில் இரு தரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இதை இன்ஸ்பெக்டர் கீதா விசாரித்து வந்தார். இந்நிலையில் திருமணத்தின்போது தனது பெற்றோர் வீட்டில் போட்ட நகைகளை ராஜேஷிடம் இருந்து வாங்கித் தருமாறு, அபிநயா இன்ஸ்பெக்டரிடம் கூறியுள்ளார்.

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

இதையடுத்து 95 பவுன் நகைகளை ராஜேஷ், இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொடுத்துள்ளார். அந்த நகைகளை அபிநயாவிடம் கொடுக்காமல் இன்ஸ்பெக்டர் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து ராஜேஷ் திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில் அனைத்து நகைகளையும் இன்ஸ்பெக்டர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 43 லட்சத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிந்தது. இந்நிலையில் நகையை திருப்பி தருவதற்கு இன்ஸ்பெக்டர் கீதா அவகாசம் கேட்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அடகு வைத்த நகைகளில் சிலவற்றை திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி 70 பவுனுக்கும் மேற்பட்ட நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த குறித்து விசாரித்த டி.ஐ.ஜி., ரம்யாபாரதி நேற்று இன்ஸ்பெக்டர் கீதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

MUST READ