Homeசெய்திகள்க்ரைம்ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை

ஸ்டுடியோ உரிமையாளர் வீட்டில் நகை கொள்ளை

-

- Advertisement -

வடபழனியில் நகை கொள்ளை: சென்னை, வடபழனியில் தனியார் ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 66 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, வடபழனியில் வசித்து வருபவர் சந்தோஷ் குமார். இவர் ஸ்டூடியோ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், சந்தோஷ் குமார் தனது குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி22ம் தேதி ஹதராபாத் சென்றுள்ளார்.

we-r-hiring

நேற்று இரவு வீடு திரும்பிய இவர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், வீட்டிலிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 13.5 லட்சம் ரூபாய் பணம், 66 சவரன் தங்க நகை, 80 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகள் பதிவாகும் ஹாட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தப்பிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

MUST READ