Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங்கை போன்று வீரலட்சுமிக்கும் கொலை மிரட்டல்

ஆம்ஸ்ட்ராங்கை போன்று வீரலட்சுமிக்கும் கொலை மிரட்டல்

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் போல தன்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் வந்துள்ளதாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கை போன்று வீரலட்சுமிக்கும் கொலை மிரட்டல் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி இன்று சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் 2 புகார் மனுக்களை அளித்துள்ளார். இதையடுத்து வீரலட்சுமி செய்தித்தாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பெரியார் குறித்து இழிவாக பேசி வரும் யூடியூப்பர் அரியலூர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன் என்றார். மேலும் தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது குறித்தும் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு பிறகு பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை போல தன்னையும் நரம்பை அறுத்து கொலை செய்து விடுவதாக போனில் மிரட்டல் வந்துள்ளது. தன்னிடம் போனில் பேசிய நபர், விசிக தலைவர் திருமாவளவன், பூவை ஜெகன் மூர்த்தி, நாகை திருவள்ளுவன் ஆகியோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

இதற்கு முன் தமிழ் தெரியாத காவல் ஆணையர் இருந்தார். தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் ஆணையர் இருப்பது மகிழ்ச்சி. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து யூடியூப்பில் பலர் பலவிதமாக பேசி காவல்துறை விசாரணையை திசை திருப்பும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். காவல்துறை உண்மையை சொல்லும் வரை அமைதி காக்கவும் என்று யூடியூப்பர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

என்னுடைய செல்போன் எண்ணிற்கு பேசிய ஒருவர் பட்டியலின தலைவர்களையும் தன்னையும் கொலை செய்வேன் என மிரட்டினார். நரம்பை அறுத்து கொலை செய்வேன் என மிரட்டுகிறார். நான் கொடுத்த புகார்களை விசாரிக்காமல் கோயம்பேடு காவல் துணை ஆணையர் குப்பையில் வீசி விட்டதாக நினைக்கிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் ரவுடிகள் தைரியமாக உலாவி கொண்டிருக்கின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் யூடிப்பர் தான் அரியலூர் சூர்யா. இவர் தான் பெரியாரை இழிவாக பேசி வருகிறார். என்னையும் மிரட்டுகிறார்.

சீமான் நடிகர் வடிவேலு போல காமெடி செய்து கொண்டிருக்கிறார். தலைமைக்கான பண்பு அவரிடம் துளியும் இல்லை. மேடையில் நரி போல கூவமாட்டேன். செயலில் காண்பிபேன். மீசை வைத்த ஆம்பளை இருந்தா வந்து கொலை செய். நாங்களெல்லாம் வேற மாதிரி என்று ஆவேசமாக பேசினார்.

நாம் தமிழர் கட்சி வளர்ந்ததற்கு அதிமுக தான் காரணம். எங்கள் கட்சியை வைத்து நாம் தமிழர் கட்சி விளம்பரம் தேடிக் கொள்கிறது” என்று வீரலட்சுமி ஆவேசமாக பேசினார்.

MUST READ