spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மும்பை செல்லும் ஏர் இந்தியா விமான பயணி கைது

மும்பை செல்லும் ஏர் இந்தியா விமான பயணி கைது

-

- Advertisement -

மும்பை செல்லும் விமானத்தில் ஏர் இந்தியா பயணி கைது

ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த ஏர் இந்தியா விமான பயணி அர்ஜூன் தாலோர் (34) கைது செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

சனிக்கிழமை (மே 25) அன்று ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் மேற்கொண்ட அர்ஜூன் தாலோர் விமானத்தின் கழிவறையில் புகைபிடித்தபோது பிடிபட்டுள்ளார். அர்ஜூன்  தலோர் கழிவறைக்குள் புகைபிடித்த உடனேயே அலாரம் பீப் அடித்ததை கேபின் குழுவினர் ஒருவர் கவனித்திருக்கிறார்.

கழிவறையிலிருந்து அவர் வெளிவந்த பிறகு கழிவறைக்குள் புகை சாம்பல் இருந்ததை கண்டு அதனை உறுதி செய்துள்ளனர். பின்னர் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 336 (மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து) கீழ் சஹார் காவல் நிலைய போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

”விமானத்தில் இருந்த பயணிகளுக்கு கேபின் குழுவினர் புகைபிடிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். எச்சரிக்கையையும் மீறி, விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அர்ஜுன் தலோர் கழிவறைக்குள் புகைபிடித்துள்ளார்” என அவரை கைது செய்த சஹார் காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

MUST READ