Homeசெய்திகள்க்ரைம்தருமபுரியில் பிரியாணி கடையில் கொலை- 4 பேர் கைது

தருமபுரியில் பிரியாணி கடையில் கொலை- 4 பேர் கைது

-

தர்மபுரி பிரியாணி கடையில் இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்தனர். அதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரியில் பிரியாணி கடையில் கொலை- 4 பேர் கைதுதருமபுரி இலக்கியம்பட்டியில் சமீபத்தில்  புதிதாக திறக்கப்பட்டது  பிரபல பிரியாணி கடையான தொப்பி வாப்பா பிரியாணி  கடை. இந்த கடையில் பணிபுரிந்து வந்த வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த  முகமது ஆசிப் (25) என்ற இளைஞரை பிரியாணி கடைக்குள் புகுந்து நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் தருமபுரி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் கொலையாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறையினருக்கு உத்திரவிட்டிருந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் விசா ரணையில் இறங்கினர்.

கொலை தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான 1. ஜன அம்சபிரியன்(27) 2. ஜன ரஞ்சன்(27)  இவர்களது உறவினர் 3. கவுதம் மற்றும் தருமபுரி மாவட்டம் சிவாடியை சேர்ந்த 4.பருத்திவளவன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்..ஷ

கொலையான முகமது ஆசிப் சேலத்திலுள்ள தனியார் கல்லூரியில் படிக்கும்போது அதே கல்லூரியில் வேறு ஒரு பாடப்பிரிவில் படித்து வந்த சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பெண் ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது, இதனிடையே அந்த பெண்ணிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கவே அதை ஏற்றுக்கொள்ளாத அந்த பெண் தனது பெற்றோரிடம் முறையாக வந்து பெண் கேட்கும்படி காதலி கூறியதை தொடர்ந்து முகமது ஆசிப் பெண் கேட்டு சென்றதாகவும், பெண் தர மறுத்த நிலையில் தனது காதலியிடம் செல்போனில் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது, இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெண்ணின் சகோதரர்கள் முகமது ஆசிப்பை தீர்த்து கட்ட திட்டமிட்டு, கொலை செய்திருப்பதும் காவல்துறையினரி்ன் விசாரணையில் தெரியவந்திருக்கிறது..

உயிரிழந்துள்ள முகமது ஆசி்ப்பும், ( இஸ்லாம் ) காதலித்து வந்த பெண்ணும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ( ஆதிதிராவிடர் ) சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சனை வெடித்து.. கொலையில் முடிந்திருக்கிறது.

தருமபுரியில் பிரியாணி கடையில் கொலை- 4 பேர் கைதுகாவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் நான்கு பேரும் இந்த கொலை சம்பவத்தை தவிர வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்தும் அவர்களது பின்னனி குறித்தும் காவல்துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடதக்கது.

MUST READ