பி. எம். டபிள்யூ. சொகுசு காரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரவாயல் அடுத்த வானகரம், போரூர் கார்டனைச் சேர்ந்தவர் கீர்த்திராஜ் (வயது 36). இவர் தனியார் நிறுவன ஊழியர்.
இவர், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பி. எம். டபிள்யூ.(B.M.W) , சொகுசு காரை பயன்படுத்தி வந்தார்.
குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தியிருந்த காரை காணவில்லை என, மதுரவாயல் காவல் நிலையத்தில், சமீபத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துனர். போலீசார் கார் திருடியது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரவாயல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவில் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.