Homeசெய்திகள்க்ரைம்உளுந்தூர்பேட்டை அருகே நியாய விலை கடை விற்பனையாளர் வீட்டில் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே நியாய விலை கடை விற்பனையாளர் வீட்டில் கொள்ளை

-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பு. கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(55). இவர் நியாய விலை கடை விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

உளுந்தூர்பேட்டை அருகே நியாய விலை கடை விற்பனையாளர் வீட்டில் கொள்ளை

கடந்த வருடம் ஜூன் மாதம் இவரது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி சமய சிங் மீனா உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை டி எஸ் பி மகேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஏட்டுகள் மணிகண்ட பெருமாள், அசோக், தண்டபாணி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று மாலை உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி டோல்கேட் அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை மடக்கி பிடித்துத்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகே நியாய விலை கடை விற்பனையாளர் வீட்டில் கொள்ளை

அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அந்த நபர் ராஜகோபால் வீட்டில் கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதனையடுத்து இந்த நபரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் திருச்சி மாவட்டம் எடைமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சுதாகர் (27) என்பது தெரிய வந்தது. பின்னர் ராஜகோபால் வீட்டில் கொள்ளை அடித்த இவர் தான் என்பதை அறிந்த போலீசார் 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சுதாகர் மற்றும் அவரோடு சேர்ந்த மூன்று நபர்கள் பூட்டி இருக்கும் வீட்டை நோட்டமிட்டு பின்னர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இந்த கொள்ளை வழக்கில் இவருடன் வந்த மேலும் இரண்டு கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுதாகர் மீது எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கொள்ளை மற்றும் கொலை வழக்கும், ஈரோடு மாவட்டத்தில் நான்கு திருட்டு வழக்கும், குன்றக்குடி கிராமத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது.

கடந்த ஐந்து வருட காலமாக இதுபோன்று பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ