திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் வழிபறி செய்த இருவரை ஊத்துக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் நேற்று மாலை வாடிக்கையாளரை பார்ப்பதற்காக பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை தண்டலம் அடுத்த தொட்ட ரெட்டி குப்பம் நோக்கி இருசக்கர வாகனத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது தண்டலம் பகுதியில் வந்தபோது வழியில் லிப்ட் கேட்ட நபரை ஏற்றுக்கொண்டு தொட்ட ரெட்டி குப்பம் நோக்கி சென்றுள்ளார். லிப் கேட் சென்ற நபர் தனது நண்பரான பாலாவை பெயர் சொல்லி போனில் எதிரே வருமாறு கூறியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு இருசக்கர வாகனம் சென்றபோது அங்கே வந்த பாலா என்ற நபரும் லிப்ட் கேட்டு சென்ற இருவரும் இணைந்து நிதி நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
பணம் இல்லாததால் அவர் கை கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி காப்பு மற்றும் செயின் அவர் வைத்திருந்த செல்போனும் பறித்து அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து அபிஷேக் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். லிப்ட் கேட் சென்றவர் தொலைபேசி மூலமாக பாலா என்ற பெயர் சொல்லி அழைத்ததை வைத்து அபிஷேக் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை போலீசார் ஏற்கனவே வழிப்பறி வழக்கில் தொடர்புடைய தொட்டா ரெட்டி குப்பம் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் என்ற மோட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவரும் அவருடைய நண்பர் ராஜேஷ் உடன் இணைந்து வழிபறி செய்தாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
நிதி நிறுவன ஊழியரிடமிருந்து கத்தியை காட்டி மிரட்டி வழிபறி செய்த வெள்ளி காப்பு செயின்களை 2000 ரூபாய்க்கு அடகு வைத்து குடித்து விட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். கடையில் அடகு வைத்திருந்த வெள்ளி காப்பு செயின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் இருவரின் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி செல்போன் வெள்ளி காப்பு செயின்களை வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் வாகன ஓட்டிகளை நிம்மதி அடைய செய்துள்ளது .