ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை! சென்னையில் பரபரப்பு
சென்னை எண்ணூரில் முன்விரோதம் காரணமாக ரவுடியை ஒட ஒட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த 25 வயதுடைய விஜய் என்பவர் பொய் விஜய். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிறுவையில் உள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை எண்ணூர் பர்மா நகர் பகுதியில் உள்ள பீலிக்கான் முனீஸ்வரர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் தனது நண்பர்களுடன் பொய் விஜய் இடுப்பில் கத்தியுடன் சுற்றி திரிந்தார்.

அப்போது நேதாஜி நகர் அருகே வரும் போது போதை சரண் என்பவரை கொலை செய்ய முயற்சி செய்த போது பொய் விஜய்யிடம் இருந்த கத்தியை பிடுங்கி போதை சரண் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்த்து பொய் விஜய் முகத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் சம்பவ இடத்திலேயே பொய் விஜய் துடி துடித்து உயிரிழந்தான். உடனடியாக அருகில் இருந்தவர்கள் எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார், பொய் விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்த தனிப்படை போலீசார், போதை சரண் (23), சுரேஷ் சுரேந்தர்27, மணிமாறன்(26), சத்யா என்கின்ற தட்டு சத்தியா (24), விக்னேஷ் என்கின்ற விக்கி (19), முஹம்மது அலி( 22), கரண்ட் என்கின்ற மண்டை கரண் (22), குணா என்கின்ற குணசேகர்(22), பாலா என்கின்ற தீபக் (17), லோகேஷ் என்கின்ற குட்டி (19), சரவணன் (18) உள்ளிட்ட 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


