Homeசெய்திகள்க்ரைம்ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லை

ரூ.4 கோடி பறிமுதல் – நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லை

-

ரூ.4 கோடி பறிமுதல் – நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லை

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 4 பேர் இன்று ஆஜராகவில்லை. மேலும் ஜூன் 6 அல்லது 7 ஆம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராவதாக வழக்கறிஞர்கள் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லை

நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சென்னையில் உள்ள அவரது நிறுவனங்களிலிருந்து தேர்தல் செலவுக்காக பல கோடி ரூபாய் பணம் கொண்டு செல்வதாக கடந்த மாதம் 6 ஆம் தேதி ஆளிவிதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி பெட்டி A1ல் 26,27,28 ஆகிய இருக்கைகளில் அமர்ந்திருந்த மூன்று பேர், தனித்தனி பைகளில் பணம் வைத்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து உளவுத்துறை போலீசார் தாம்பரம் மாநகர போலீசார், மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்ததும் பணம் வைத்திருந்த மூன்று பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லை

விசாரணையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணிபுரியும் சதீஷ் அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள் என தெரிய வந்தது. அவர்கள் பைகளில் வைத்திருந்த நான்கு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரன் நெருங்கிய உறவினரும், தொழிலதிபருமான முருகனின் சாலிகிராமம் வீட்டில் போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பணத்துடன் பிடிபட்ட 3 பேரான சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, எழும்பூர் சிபிசிஐடி அலுவலகம் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லை

இதேபோல் பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலை கொரியன் ரெஸ்டாரண்ட், நீலாங்கரை பகுதியில் உள்ள கோவர்தனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

 

கோவையில் வசிக்கும் தமிழ்நாடு பாஜக பொருளாளர் சேகரிடம் அவரது வீட்டில் வைத்து கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தமிழ்நாடு பாஜக தொழிற்பெயர் தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் 31 ஆம் தேதி( இன்று) சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

ரூ.4 கோடி பறிமுதல் - நயினார் நாகேந்திரன் இன்றும் ஆஜராகவில்லை

இந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் 31 ஆம் தேதி ஆஜராக முடியாது. வரும் 6 அல்லது 7 ஆம் தேதி நான்கு பேரும் ஆஜராகிறோம் என தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர்.

MUST READ