Homeசெய்திகள்க்ரைம்ஈரோடு அருகே ஆன்லைன் மூலம் அதிக லாபம் பெறலாம் என மோசடி

ஈரோடு அருகே ஆன்லைன் மூலம் அதிக லாபம் பெறலாம் என மோசடி

-

ஈரோட்டில், ஆன்லைன் மூலம்  தங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என போலியாக விளம்பரங்கள் செய்தும், ஆன்லைனில் டாஸ்க் நடத்தியும் இருவேறு மோசடிகளில் ஈடுபட்டு 40 லட்சம் ரூபாய் அபகரித்த வழக்குகளில் கேரள இளைஞரை கைது செய்த ஈரோடு சைபர் கிரைம் போலீசார் அவரிம் இருந்து 9 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு அருகே ஆன்லைன் மூலம் அதிக லாபம் பெறலாம் என மோசடிஈரோடு இரயில்வே காலனியை சேர்ந்த கல்யாணசுந்தரம் ஆன்லைன் இன்வெஸ்ட்மெண்ட் மோசடியால் சுமார் 23 லட்சம் இழந்துள்ளார். அதே போல்,  சம்பத் நகரைச் சேர்ந்த ராம்குமார்  டாஸ்க்  இன்வெஸ்ட்மெண்ட் மோசடியால் சுமார் 17 லட்சம் இழந்துள்ளார்.

ஈரோடு அருகே ஆன்லைன் மூலம் அதிக லாபம் பெறலாம் என மோசடிமொத்தமாக இருவரும் 40 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் இது சம்பந்தமாக ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதன் விசாரணையில், முக்கிய குற்றவாளிகள் கேரள மாநிலம் மலப்புரத்தில் இருப்பதாக தெரியவந்த்து.  இதனையடுத்து  காவல் ஆய்வாளர்  கவிதா லட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கேரள மாநிலம் சென்று குற்றவாளிகளை கண்டறிந்தனர். அவர்களிடம் இருந்து ரூ 8,95,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது, மேலும் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூரை சேர்ந்த சகீர்கான் (32) த.பெ லியாகத் அலி என்பவரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. நெட்வொர்க் அமைத்து இந்த கும்பல் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொடர்ந்து மற்ற குற்றாவளிகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் ஆன்லைன் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் பார்ட் டைம் ஜாப் போன்ற மோசடி பெடெக்ஸ் குரியர் பெயரில் CBI அதிகாரிகள் போல் வீடியோ காலில் மோசடி மற்றும் அறிமுகமில்லாத நபர்களின் லிங்குகளை தொடாமல் தவிர்க்கவும் போலியான விளம்பரங்களை நம்பி பணம் ஏமாற வேண்டாம் என்றும் மேலும் சைபர் குற்றங்களை 1930 என்ற இலவச டோல் பிரீ எண்ணில் புகார் செய்யவும் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்றும் ஈரோடு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

MUST READ