spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…

நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…

-

- Advertisement -

முதல்கட்டமாக 25 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்ததற்கு 6 லட்சம் ரூபாயை கமிஷனாக வாங்கிக் கொண்டு அலட்சியமாக பேசும் சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ வைரல் ஆகி வருவதால் பரபரப்பு.நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த முரளி என்பவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே JMJ ஜூவல்லரி என்ற நகைக்கடையை வைத்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த தமிழழகன், அவர் மனைவி பிரமா , மகன் விக்னேஷ்வர்  ஆகிய மூவரும்  பணத்தை ஏமாற்றி விட்டதாகவும் , பஞ்சாயத்து மூலம் பேசி பணத்தை மீட்டு தருவதாக கூறிய சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் சிறப்பு  உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் கமிஷன் தொகையாக 6 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு,  எனக்கு வரவேண்டிய 80 லட்சம் தொகையை பெற்று தராமல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக  செயல்பட்டதாகவும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

நகைக் கடை உரிமையாளர் முரளி தனது புகாரில்,  சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தமிழழகன் அவருடைய மனைவி பிரேமா மகன் விக்னேஷ்வர் ஆகிய மூன்று பேரும் குடும்பத்துடன் தன்னை  சந்தித்து, அவர்களுடைய சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்துக் கொண்டு பணம் கேட்டனர்.  அதன் அடிப்படையில் வங்கி மூலம் ஒரு கோடியே 21 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுத் தந்தோம்.  இந்த நிலையில் கடனை பெற்றுக் கொண்ட தமிழழகன் கடந்த மூன்று ஆண்டுகளாக அசல் மற்றும் வட்டியை  திருப்பி  தராமல் ஏமாற்றி வந்தனர்.   எனவே இது தொடர்பாக தன்னுடைய பணத்தை மீட்டு தரக் கூறி கடந்த ஆண்டு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க சென்றோம்.

we-r-hiring

காவல் துணை ஆணையர் கீதா அவரிடம் புகார் கொடுக்க சென்ற போது , அங்கு துணை ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர் , எங்களை வரவழைத்து , வழக்கு  பதியாமல்  பஞ்சாயத்து மூலம் பேசி பணத்தை மீட்டுத் தருவதாக உறுதியளித்தார்.   அதன்படி நான்கு மாதத்தில் தமிழழகன்  இடமிருந்து ஒரு கோடியே 5 லட்சம் ரூபாயை பெற்று தருவதாக பேசி முடித்தார். இதனையடுத்து முதல் கட்டமாக 25 லட்சம்  ரூபாயை பெற்றுக் கொடுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ,   தங்களது அலுவலக செலவுக்கு பணம் வேண்டும் என்று ஆறு லட்ச ரூபாயை கமிஷனாக எடுத்துக் கொண்டார். மீதியுள்ள 80 லட்சம் ரூபாயை ஒரு மாதத்தில் பெற்று தருவதாக கூறி தொடர்ந்து எங்களை அலைகழித்து வந்தார்.நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…

மேலும் அடமான பத்திரத்தை திருப்பி கொடுத்தால் தான் வேறு ஒரு இடத்தில் தமிழழகன் அதை அடமானம் வைத்துவிட்டு உங்களுக்கு பணத்தை திருப்பித் தர முடியும் என நைசாக பேசி , பத்திரத்தையும் வாங்கிக் கொண்டனர். ஆனால் அதன் பிறகும்  தமிழழகன் குடும்பத்தினர்,  பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ,   80 லட்சம் பணத்தை மீட்டு தராமல்,  எனக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை என்றும்  பஞ்சாயத்து செய்து  மாறுதலடைந்து  சென்ற மாநகர துணை ஆணையாளர் கீதாவிடம் கேளுங்கள் என்று SSI சரவணன் கூறுகிறார் என்று வேதனை தெரிவித்த முரளி ,இது தொடர்பாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் பேசிய வீடியோ தன்னிடம் உள்ளது எனக்கூறி  தற்போது அதனை வெளியிட்டுள்ளார்.

இனி தனக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றும் , என் மீது புகார் கொடுத்தால் என்னை சஸ்பெண்ட் செய்வார்கள் பின்னர் மூன்று மாதத்தில் மீண்டும் பணிக்கு வந்து விடுவேன் எனவே உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று உதவியாளர் சரவணன் கூறும் வீடியோ மற்றும் உதவியாளர் சரவணன் 6 லட்சம் ரூபாய் கமிஷன் பெரும் சிசிடிவி காட்சி வீடியோ என அனைத்தையும் தற்போது முரளி வெளியிட்டதோடு அதனை சாட்சியாக ஆவணங்களுடன்  மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகாராக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இது குறித்து முரளி செய்தியாளர்களிடம் கூறும் போது , தமிழழகன் தற்போது என்னை கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவருக்கு துணையாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தங்களை மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ரிதன்யாவிற்கு கொடுக்கபட்ட சீர்வரிசைகள்….இணையத்தில் வெளியாகி  அதிர்ச்சி!  

MUST READ