spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்க கோரி -உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்க கோரி -உயர்நீதிமன்றம் உத்தரவு

-

- Advertisement -
kadalkanni

நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காத வழக்கில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்க கோரி -உயர்நீதிமன்றம் உத்தரவுநடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2018 ம் ஆண்டு வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் வெளியானது. ஒப்பந்தப்படி தனக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி 30 லட்சம் ரூபாயை வழங்கவில்லை எனவும், 27 லட்சம் ரூபாய் டி.டி.எஸ். வரி செலுத்தப்படவில்லை எனவும், பட வெளியீட்டுக்காக பெற்ற 35 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தரவில்லை எனவும் கூறி, பட தயாரிப்பாளர் முருகன் குமாருக்கு எதிராக, நடிகர் அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மொத்தமாக 65 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்க வேண்டும் எனவும், 27 லட்சம் ரூபாய் டி.டி.எஸ். வரியை வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டும் எனவும், கடந்த 2019 ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, தொகையை வழங்காததால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும், தயாரிப்பாளருக்கு சொந்தமான சொத்துக்களை அறிவிக்க உத்தரவிடக் கோரியும், நடிகர் அரவிந்த் சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என பட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது, சொத்து விவரங்களை தாக்கல் செய்து விட்டதாகவும், தனக்கு சொந்தமாக எந்த சொத்துக்களும் இல்லை என, தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து ஏதும் இல்லாவிட்டால் திவாலானவர் என அறிவித்து கைதாவதை  தவிர்க்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்ததாகக் கூறி, தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், சொத்துக்களை அறிவிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை ஜூலை 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளாா்.

MUST READ