Homeசெய்திகள்க்ரைம்சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID SI தூக்கிட்டு தற்கொலை

சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID SI தூக்கிட்டு தற்கொலை

-

- Advertisement -

 

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID SI தூக்கிட்டு தற்கொலைசென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனது மனைவி குழந்தகள் என குடும்பத்துடன் தங்கி இருப்பவர் ஜான் ஆல்பர்ட்.

சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID துணை காவல் ஆய்வளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2 மணி அளவில் கோர்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனது காவல் துறை யூனிபார்ம் அயன் செய்ய வேண்டும் என கூறிவிட்டு தனது படுக்கையறைக்கு சென்று அறையில் இருந்த சீலிங் பேன் ஊக்கில் மனைவியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர்

சிறிது நேரம் கழித்து மனைவி கதவை தட்டியும் ஜான் ஆல்பர்ட்(கணவன்) கதவை திறக்கவில்லை. வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காத காரணத்தால் சந்தேகம் அடைந்த மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்த கணவரை கீழே இறக்கி பின்பு 108 ஆம்புலன்சிற்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ஜான் ஆல்பர்ட்-ன் உடலை பரிசோதனை செய்துவிட்டு இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து மனைவியிடம் விசாரித்த போது குடும்ப பிரச்சினை காரணமாக இவ்வாறு செய்து கொண்டார் என ஜான் ஆல்பர்ட் மனைவி தெரிவித்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

MUST READ