spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர்

இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர்

-

- Advertisement -
kadalkanni

இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர்

இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயபுரம் ஆஞ்சநேய நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் வாடகைக்கு குடியிந்தவர் நரசிம்மலு (40). இவர் அம்பத்தூரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார்.

இளம் பெண்ணிற்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த நரசிம்மலு ,
அடிக்கடி வீட்டு வாடகைத் தராமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது பற்றி இளம்பெண் ராயபுரம் போலீஸ் நிலையத்தில் கடந்த 9-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

பிரபல பிக்பாஸ் நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது….. வைரலாகும் போட்டோஸ்!

இதையடுத்து நரசிம்மலு வீட்டை காலி செய்து கொண்டு அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டுக்கு வாடகைக்கு சென்றிருக்கிறார். இதை மனதில் வைத்துக் கொண்டு பழி வாங்குவதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இளம்பெண்ணை பற்றி தவறாக பேசி அவதூறு பரப்பி உள்ளார். இன்ஸ்டா குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவும் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக இளம்பெண் இராயபுரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீசார் ஆபாச வசை, பெண்ணின் மாண்பிற்கு ஊறு விளைவித்தல், பெண் நன்மதிப்பை கெடுத்தல், பெண் வன்கொடுமை, தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகக் கையாளுதல் ஆகிய பிரிவுகளில் மாநகராட்சி ஊழியர் நரசிம்மலு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ