spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

-

- Advertisement -

நடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

ராசிபுரம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை நடுரோட்டில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The teacher was stabbed for refusing to come to support the family |  குடும்பம் நடத்த வர மறுத்ததால் ஆசிரியைக்கு கத்திக்குத்து

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த காயத்ரிக்கும் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜாவிற்கும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் சஸ்மிதா என்ற 8 வயது மகளும் வைஷ்ணவ் என்ற 5 வயது மகனும் உள்ளனர். ராஜா கட்டிட வேலை மற்றும் கம்பி கட்டும் வேலைகளுக்கு சென்று வந்த நிலையில் தொடர்ந்து பணிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவதையே வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட காயத்ரி, ராசிபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து பணிபுரிந்து வந்தார். ஆசிரியர் பணிக்கு சென்று வந்த காயத்ரி மீது சந்தேகப்பட்ட ராஜா அவரை அடித்து துன்புறுத்துவதும், செல்போனை பிடுங்கி வைப்பதுமாக இருந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காயத்ரி சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் குழந்தைகளுடன் கடந்த ஐந்து வருடங்களாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

we-r-hiring

கேரளாவில் பெண் மருத்துவர் கொலை : இந்திய மருத்துவ கூட்டமைப்பு கண்டனம்..

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக தான் மனம் மாறி திருந்தி விட்டதாக கூறி சனி ,ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நான் குழந்தைகளை பார்க்க வருகிறேன் என சொல்லிக்கொண்டு தாதகாப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தைகளுடன் இருந்துள்ளார் ராஜா. 5.8.23 அன்று காயத்ரிக்கு போன் செய்த ராஜா நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் குழந்தைகளை பார்க்க வருகிறேன் என்றும் அதனால் நானே உன்னை பள்ளிக்கு வந்து அழைத்து செல்கிறேன் எனவும் கூறியுள்ளார். சுமார் 5.30 மணியளவில் பள்ளிக்கு வந்த ராஜாவுடன் மகன் மற்றும் மகளை அழைத்துக் கொண்டு காயத்ரி சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது.

வாக்குவாதம் முற்றவே சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சக்திநகர் அருகே சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்திய ராஜா ஏற்கனவே தான் திட்டமிட்டபடி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காயத்ரியை குத்த வந்துள்ளார். கத்தியை பார்த்து பயந்த காயத்ரி கூச்சலிட்டு குனிந்து கொள்ளவே முதுகு மற்றும் கழுத்தில் நான்கு ஐந்து இடங்களில் கத்தியை வைத்து சரமாரியாக குத்தியுள்ளார். உன்னை கழுத்தறுத்து விடுகிறேன் என்று கூறிக் கொண்டு குத்திய ராஜாவை பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சத்தமிடவே ,மகன் வைஷ்ணவ்வை தூக்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

murder

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் போலீசார் கத்தி குத்தால் காயம் அடைந்த காயத்ரியை ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் தப்பி ஓடிய கணவர் ராஜாவை தேடி வருகின்றனர்.

MUST READ