spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்குவது போல் நடித்த மூவர்… கணவன் மனைவி போல் நாடகமாடி நூதன...

திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்குவது போல் நடித்த மூவர்… கணவன் மனைவி போல் நாடகமாடி நூதன முறையில் மோசடி!

-

- Advertisement -

திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்க வேண்டும் என கணவன் மனைவி நாடக மாடி நான்கு சவரன் நகை திருடி சென்ற மூன்று நபர்கள் கைது!

திருமணத்திற்கு தங்க மாங்கல்யம் வாங்குவது போல் நடித்த மூவர்… கணவன் மனைவி போல் நாடகமாடி நூதன முறையில் மோசடி!சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு தனிப்படை அமைத்து திருவான்மியூர் போலீசார் நகைகளை திருடி சென்ற மூன்று பேர் கொண்ட கும்பலை பிடித்துள்ளனர்.

we-r-hiring

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் உள்ள லால் சாந்த் என்பவருக்கு சொந்தமான பிரபல நகைக்கடையில் நகை எடுப்பதற்காக மூன்று பேர் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் தங்களை கணவன் மனைவி என்றும் உறவினர் என்றும் நான் கடைக்காரரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு மாங்கல்யம் நகை வாங்க வந்துள்ளதாகவும் அதில் உள்ள மாடல்களை எடுத்து காட்டும்படி கடையில் உரிமையாளரான லால் சாந்த் இடம் கேட்டுள்ளனர்.

இதனை அடுத்து கடையில் உரிமையாளர் வேறு நகைகளை எடுத்து காண்பிப்பதற்கு முற்பட்டபோது  கடைக்கு வந்த மூன்று நபர்களும் கூட்டு சேர்ந்து மேசை  மீது வைக்கப்பட்டிருந்த நான்கு சவரன் நகைகளை கடையிலிருந்து திருடிக் கொண்டு சென்று விட்டனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளரான லால் சாந்த் இது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதல்கட்டமாக கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி கட்சியின் அடிப்படையில் மூன்று நபர்களும் சேர்ந்து தங்க நகைகளை எடுத்துக்கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியது அடுத்து போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

ஆனால் அவர்கள் மூன்று பேரும் நகைகளை திருடிக் கொண்டு சென்னையை விட்டு தப்பி சென்ற நிலையில் அவர்கள் குறித்து சென்னையில் எங்கெல்லாம் தங்கி இருந்தார்கள் என்கிற அடிப்படையில் விசாரணை செய்தனர்.

விசாரணையில் விருதுநகர் மாவட்டம் தாயார்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் (53)  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சுந்தரி (45) மற்றும் விருதுநகர் மாவட்டம் தயால்பட்டி என்கிற பகுதி சேர்ந்த பாண்டீஸ்வரி (50) ஆகிய மூன்று பேரின் முழு விவரம் அறிந்து போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ