spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்வங்கி ஊழியர்கள் துணையுடன்…… போலி நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட – 3 பேர் கைது

வங்கி ஊழியர்கள் துணையுடன்…… போலி நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட – 3 பேர் கைது

-

- Advertisement -

பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முலாம் பூசிய கவரிங் நகையை அடமானம் வைத்து மோசடி செய்ய முயன்ற தாய், மகள், மற்றும் ஒருவர் கைது.வங்கி ஊழியர்கள் துணையுடன்…… போலி நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட – 3 பேர் கைதுமானாமதுரை பிப் 07  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாரதஸ்டேட் வங்கியில் தங்க முலாம் பூசிய கவரிங் நகையை அடமானம் வைத்து பணம் பெற முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர். மானாமதுரை நகரின் பிரதான வீதியில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. 40 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த வங்கியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

தினசரி தங்க நகை அடமான கடனும் வழங்கப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கியில் வங்கி ஊழியர்கள் துணையுடன் கவரிங் நகையை அடமானமாக பெற்று கொண்டு கடன் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மானாமதுரை சமத்துவபுரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி கோட்டையம்மாள் (50), அவரது மகள் ஈஸ்வரி (30) மற்றும் மதுரை நிலையூரைச் சேர்ந்த ஜனார்த்தனன் ஆகிய மூவரும் மானாமதுரை பாரத ஸ்டேட் வங்கியில் தங்க முலாம் பூசிய நகைகளை அடமானமாக கொடுத்து 19 லட்ச ரூபாய் கடன் கேட்டுள்ளனர்.

we-r-hiring

நகை மதிப்பீட்டாளர் சோதனை செய்த போது தங்க முலாம் பூசிய நகை என்பதால் கடன் வழங்காமல் திருப்பு அனுப்பினர்., இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தகவல் வங்கி ஊழியர்கள் மூலமாக வெளியில் தெரியவரவே நேற்று வங்கி கிளை மேலாளர் ஜான்சிராணி மானாமதுரை போலீசில் தங்க முலாம் பூசிய நகையை வைத்து பணம் பெற முயன்றவர்கள் மீது புகார் கொடுத்தார். மானாமதுரை போலீசார் மூவரையும் கைது செய்தனர். இதில் ஜனார்த்தனன் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்க முலாம் பூசிய கவரிங் நகைகளை அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் கொடுத்து வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் கோட்டையம்மாளும், ஈஸ்வரியும் வெறும் கருவியாக செயல்பட்டுள்ளனர். ஜனார்த்தனன் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியிருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே முழு விசாரணைக்கு பின்தான் இது தெரியவரும், மானாமதுரையில் தங்க முலாம் பூசிய நகையை அடமானம் வைத்து பணம் பெற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை –  ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

MUST READ