திருநின்றவூரைச் சேர்ந்த இளைஞர் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞர் கைதானார்.
இன்ஸ்டா காதலியை கரம் பிடித்த இளைஞர் மறு தினமே வீட்டில் ஏற்பாடு செய்த பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட விவகாரம் 2ஆண்டுகள் பிறகு தெரிய வரவே முதல் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆவடி அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் 21 வயது பெண்.இவருக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக சென்னை கேளம்பாக்கம்,சர்ச் தெருவைச் சேர்ந்த பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்/30 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளனர்.கடந்த 2022 ல் மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணிடம் நகை,பணம் கேட்டு துன்புறுத்தி பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் அவரது வீட்டிற்கு சென்றார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் 2 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இளம் பெண்ணுடன் இருந்த தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் இளம் பெண் அவரை தேடி கேளம்பாக்கம் வீட்டிற்கு சென்ற போது பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் காதல் திருமணமான அடுத்த நாளே வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தது தெரிய வந்தது.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் கேட்ட போது முதல் திருமணம் குறித்து வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேடவாக்கம் கூட்ரோடு சாலையில் பேருந்து போக்குவரத்து சேவையில் மாற்றம்..
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கேளம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த பிரின்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்டாக காதலியை திருமணம் செய்த விவகாரத்தை மறைத்து வீட்டில் ஏற்பாடு செய்த பெண்ணை திருமணம் செய்து சாமர்த்தியமாக இரண்டு ஆண்டு இரு பெண்களுடன் குடும்பம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.