spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது

ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது

-

- Advertisement -

ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது

ஆவடியில் வாலிபரை காரில் கடத்தி பணம் பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

we-r-hiring

ஆவடி அருகே வாலிபரை காரில் கடத்தி நகை, பணம் பறித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (36). திருமண அலங்காரம், ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர், கடந்த 2021ல் சென்னையில் உள்ள சொகுசு ஓட்டலுக்கு சென்றபோது,அங்கு வேலை செய்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி அந்த பெண், குடும்ப கஷ்டத்தை கூறி செந்தில்குமாரிடம் பணம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, பெண்ணுக்கு பணம் கொடுப்பதற்காக ஆவடி அடுத்த சேக்காடு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு செந்தில்குமார் சென்றுள்ளார். அப்போது வீட்டில் அந்த பெண் மட்டும் இருந்துள்ளார். அங்கு திடீரென வந்த 4 பேர் அந்த பெண்ணை காரில் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டு செந்தில்குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.செந்தில்குமாரை நிர்வாணமாக்கி அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் ₹13,000 பணத்தை பறித்துள்ளனர். இது குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அவரது கண்ணை கட்டி காரில் கடத்தி முடிச்சூர் பகுதியில் சாலையோரத்தில் தள்ளிவிட்டு தப்பினர். இது குறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் அஜித் மற்றும் சரவணன் இருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான முகப்பேர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அமீனா(23), கூடுவாஞ்சேரியை சேர்ந்த பெத்தேர் ஹசில் (31) ஆகியோரை நேற்று முன்தினம் ஆவடி பகுதியில் போலீசார் கைது செய்தனர். காவல்துறை விசாரணைக்கு பின்பு குற்றத்தை ஒப்பு கொண்டதால் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ