பட்ட பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து 30 லட்சம் பழிப்பறி செய்த வழக்கில் இருவர் கைது 13 லட்சம் பறிமுதல். 15 லட்சம் பணத்துடன்தலை மறைவான முக்கிய குற்றவாளி முன்னாள் போலீசின் மகனுக்கு வலைவீச்சு…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் இம்மாதம் 22 ஆம் தேதி பட்டப் பகலில் அரவிந்தன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் 30 லட்ச ரூபாய் பணத்துடன் தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்ற பொழுது அவரது இரு சக்கர வாகனத்தின் மீது முன்புறமும், பின்புறமும் மோதி அவரை கீழே தள்ளி பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டு பணத்தை எடுத்து இருசக்கர வாகனத்துடன் மூன்று பேர் தப்பி சென்றனர். இது குறித்து காரைக்குடி வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சிசிடி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

இதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய காளையார் கோவில் அருகே செய்யானேந்தல் என்ற ஊரை சேர்ந்த செல்வகுமார் மற்றும் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த மதன்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 12 லட்சம் ரூபாயை மீட்டனர். மேலும் மூளையாக செயல்பட்ட காரைக்குடியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தியை தேடி வருகின்றனர்.
ஹவாலா பணத்தை கொண்டு வருபவர்களை நோட்டமிட்டு வழிப்பறி செய்வதில் தேர்ந்தவரான கிருஷ்ணமூர்த்தி சிறையில் செல்வகுமாருக்கும், மதன்குமாருக்கும் பழக்கமாகியுள்ளார். இதில் ஹவாலா பணம் நடமாட்டம் குறித்து தான் தகவல் தருவதாகவும் அந்த பணத்தை கொள்ளையடித்தால் பாதி பணத்தை தனக்கு தந்து விட வேண்டும், எது நடந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் காரைக்குடி பைனாஸ் கம்பெனி ஒன்றிற்காக அரவிந்தன் என்பவர் எடுத்து சென்ற பணம் 30 லட்சம் குறித்த தகவலை கிருஷ்ணமூர்த்தி செல்வகுமார், மதன்குமார் இருவருக்கும் சொல்லி 3 பேரும் சேர்ந்து ரவிந்தனை வழிமறித்து பணத்தை பறித்து சென்றதுடன் இருசக்கர வாகனத்தையும் எடுத்து சென்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பாஜக பிரமுகரை கொன்று நகைகள் கொள்ளை… 15 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது!
இதில் 15 லட்சம் பணத்துடன் தலைமறைவான கிருஷ்ணமூர்த்தி முன்னாள் போலீஸ்காரர் ஒருவரின் மகன் என்பதும், பல்வேறு ஹவாலா பண வழிப்பறி வழக்கில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடதக்கது


