spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நீட் தேர்வில் போலி சான்றிதழை தயாரித்தது யார் ?  அப்பா மகனிடம்  போலீசார் தீவிர விசாரணை…!

நீட் தேர்வில் போலி சான்றிதழை தயாரித்தது யார் ?  அப்பா மகனிடம்  போலீசார் தீவிர விசாரணை…!

-

- Advertisement -

நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதாக போலி சான்றிதழ் மற்றும் போலி சேர்க்கை சான்றிதழை கொண்டு வந்த இளைஞர் மற்றும் அவரது பெற்றோரிடம் கீழ்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை.

நீட் தேர்வில் போலி சான்றிதழை தயாரித்தது யார் ?  அப்பா மகனிடம்  போலீசார் தீவிர விசாரணை…!இன்று காலை எம் எம் சி கல்லூரியில் சேர்க்கைக்கான அனுமதி சீட்டுடன் மாணவர் ஒருவர் தனது பெற்றோரிடம் வந்து, அங்கு கல்லூரி அதிகாரிகளிடம் ஏன் இன்னும் தனக்கு கல்லூரியில் சேர்வதற்கான எந்த அழைப்பும் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

we-r-hiring

பின்னர் அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த சான்றிதழ்களை சரிபார்த்த போது,  அவ்வாறு எந்தப் பெயரும் இல்லாததால் உடனடியாக  டி எம் இ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு மாணவர் கொண்டு வந்த சான்றிதழ்களை சரி பார்த்தபோது அனுமதி சான்றிதழ் போலியானவை என்பது தெரியவந்தது.

நீட் தேர்வில் போலி சான்றிதழை தயாரித்தது யார் ?  அப்பா மகனிடம்  போலீசார் தீவிர விசாரணை…!பின்னர் சான்றிதழ் கொண்டு வந்த மாணவர் மற்றும் அவரது தந்தையிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தியதில், மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவன் என்பதும், கடந்த 2023 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 127 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், அதன் பின்பு 2024 ஆம் ஆண்டு 129 மதிப்பெண்கள் பெற்று இருப்பதும் தெரியவந்தது.

ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டோம் – நாகேந்திரன் வாக்குமூலம்

அரசு மருத்துவக் கல்லூரியில் சீட்டைப் பெறுவதற்காக 698 மதிப்பெண் எடுத்ததாக போலியான சான்றிதழை தயார் செய்தும், அதே போல எம்எம்சி கல்லூரியில் சேர்க்கை காண அனுமதி சீட்டையும் அரசு இலட்சிநையுடன் போலியாக தயாரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சான்றிதழை தயாரித்துக் கொடுத்தது யார் என்ற கோணத்தில் கீழ்ப்பாக்கம் போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ