Homeசெய்திகள்க்ரைம்வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த பெண் கைது

வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த பெண் கைது

-

வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த பெண் கைது

பல்லடம் அருகே வடமாநில இளைஞரை கடத்தி பணம் பறித்த வடமாநில பெண் கைது செய்யப்பட்ட வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரம் செந்தூரன் காலனி பகுதியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாஜி மன்டல் என்பவர் தனது மனைவி ரூமி காந்தூண், மகள் சாத்திய காந்தூனுடன் வசித்து வருகிறார். இவர் சின்னகரை பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் கான்ட்ராக்ட் மூலம் ஆட்களை வைத்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி இரவு 8 மணி அளவில் சாஜி மன்டலை போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர் நான்கு வருடங்களுக்கு முன்பு உங்களிடம் வேலை பார்த்தேன். தற்போது வேறு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன். வீட்டு வாடகை கொடுக்க முடியாத காரணத்தால் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு கூறிவிட்டார். தற்போது வேறு வீட்டிற்கு செல்வதற்கு பணம் இல்லை எனவே நீங்கள் 4000 பணம் கொடுத்து உதவுவேண்டும், அடுத்த வாரத்தில் இருந்து உங்களிடம் வேலைக்கு வருகிறேன் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஷாஜி மண்டல் அந்தப் பெண்ணிற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக வீட்டிற்கு சென்று 4 ஆயிரம் பணம் எடுத்து கொண்டு லட்சுமி நகர் பகுதிக்கு இரவு 9 மணி அளவில் சென்றுள்ளார். அங்கு சென்று அந்த பெண்ணை தொடர்பு கொண்ட போது சின்னகரை பகுதியிலிருந்து அருள்புரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு பனியன் நிறுவனம் முன்பு நின்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சாஜி மண்டல் அந்தப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பனியன் நிறுவனம் அருகே இருட்டு பகுதியில் நின்றிருந்த பெண்ணை அழைத்து பேசியுள்ளார். செல்போனில் தொடர்பு கொண்ட பெண் நீயா என பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு சொகுசு காரில் வந்த நான்கு பேர், கத்தியை காட்டி மிரட்டி சாஜி மண்டலை கடத்தி சென்றுள்ளனர். காரில் செல்லும் போது சாஜி மண்டலிடம் கத்தியை காட்டி பத்து லட்சம் பணம் கொடுத்தால் உன்னை விட்டு விடுகிறோம் இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். மேலும் சாஜி மன்டலை கடத்திய நான்கு பேரும் அவரிடம் இருந்த 4000 ரூபாய் பணம் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி கைச்செயினை பறித்துள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என கூறியதை அடுத்து உனது நண்பர்களிடம் பணம் கொண்டு வரச்சொல் என கூறி தாக்கியுள்ளனர்.

2

தொடர்ந்து அவரது கண்களை கட்டி அடையாளம் தெரியாத கட்டிடத்திற்கு அழைத்து சென்று கை கால்களை கட்டி கத்தி மற்றும் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் சாஜி மண்டலிடம் இருந்த ஏடிஎம் கார்டு பறித்து கொண்டு அதன் ரகசிய எண்ணை பெற்று கொண்ட அவர்கள் திருப்பூருக்கு சென்று ஏ.டி.எம் மூலமாக 36 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டனர். அதிகாலை 3 மணி அளவில் சாஜி மண்டலை திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு அவரது கையில் 500 ரூபாய் கொடுத்து ஆட்டோவுக்கு வைத்து கொள், இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவோம் என கூறி இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து தனது வீட்டுக்கு சென்ற சாஜி மண்டல் இது குறித்து தனது நிறுவன மேலாளரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இருவரும் பல்லடம் காவல்நிலையம் வந்து புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது சின்னகரை லட்சுமி நகர் பகுதியில் வசித்து வரும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த அஜீத் குமார் என்பவரது மனைவி சுகுலா சர்தார் என்பதும்,அவரது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சுகுலா சர்தாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 4 பேரை தேடி வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த கிளின்டன் ஆகிய இருவரும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இதனையடுத்து முக்கிய குற்றவாளியான சென்னையை சேர்ந்த டாட்டூ தினேஷை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

 

MUST READ