spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பிரபல நகைக்கடையில் நகை திருடிய பெண் கைது

பிரபல நகைக்கடையில் நகை திருடிய பெண் கைது

-

- Advertisement -

பிரபல நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நகையை திருடிய பெண் ஐந்து மாதம் தேடுதலுக்கு பின் கைது…பிரபல நகைக்கடையில் நகை திருடிய பெண் கைதுசென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் (ஜெயச்சந்திரன்) கடந்த ஜனவரி மாதம் பெண் ஒருவர் நகை வாங்க வந்துள்ளார். வளையல்கள் பார்ப்பது போல் எதுவும் வாங்காமல் சென்ற நிலையில் இரவு நகைகளை சரி பார்த்தபோது 24.41 கிராம் எடை கொண்ட வளையல்கள் குறைவாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மேலாளர் உடனடியாக சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது பர்தா அணிந்து வந்த பெண் நகைகளை பார்ப்பது போன்று திருடி செல்வது தெரியவந்துள்ளது. இது குறித்து கடந்த ஜனவரி மாதம் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பல நாட்களாக அவரை தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில் அவர் பயன்படுத்திய வாகன எண்ணை வைத்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.

we-r-hiring

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/k-balakrishnan-statement-5/87848

அப்போது கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் அந்த இருசக்கர வாகனம் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோது  அந்த வீட்டில் இருந்த நூர் அஜ்மத் (23) என்கிற பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்

சிசிடிவி காட்சியில் இருந்த பெண்ணும், இவரும் ஒருவர் தான் என உறுதி செய்யப்பட்ட,பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருடிய நகையை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மற்றொரு நகை கடையில் விற்பனை செய்து 70 ஆயிரம் பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.பிறகு அங்கு சென்ற போலீசார் உருக்கிய நகையாக இருந்த நகையை மீட்டு திருடிய பெண் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ