சேலத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததோடு, அவரிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கொலை செய்த விவகாரத்தில் ரவுடி உள்பட இரண்டு பேர் கைது…..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மின்னக்கல் பகுதியை சேர்ந்தவர் மலர் (43). இவர் துடைப்பம் எடுத்து சென்று தெருக்களில் விற்பனை செய்து வந்தார். கடந்த 25ஆம் தேதி சிகிச்சைக்காக சேலம் செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு வந்தவர் , மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் , சேலம் வந்த தனது மனைவியை காணவில்லை என சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் சேலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். விசாரணையின் போது மலர் கொலை செய்யப்பட்டு அவரது உடல் ஏற்காடு அடிவாரத்தில் வீசப்பட்டது கடந்த 29 ந் தேதி தெரியவந்தது.

இதனையடுத்து இந்த கொலை விவகாரம் தொடர்பாக, சேலம் மாநகர உதவி ஆணையர் ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர். ஏற்காடு அடிவாரப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து , இது தொடர்பாக கன்னங்குறிச்சி தாமரை நகரை சேர்ந்த ரவுடி கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளி சக்திவேல் ஆகிய இருவரையும் சேலம் டவுன் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாமரை நகரை சேர்ந்த ரவுடி கனகராஜ் சரக்கு ஆட்டோவில் பூண்டு , வெங்காயம் ஆகியவற்றை பலவேறு பகுதிகளுக்கும் சென்று விற்பனை செய்து வருபவர் ஆவார். இந்த நிலையில் வியாபாரத்திற்கு செல்லும் போது மின்னக்கல்லை சார்ந்த விளக்கமாறு (துடைப்பம்) விற்கும் மலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் கடந்த வாரத்தில் ,பூண்டு விற்கும் ரவுடி கனகராஜ் , மலரிடம் உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்துள்ளார். அதன்படி கடந்த 26 ஆம் தேதி , சேலம் வந்த மலரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் கனகராஜின் நண்பர் சக்திவேலும் அங்கு வந்துள்ளார். அப்போது கட்டாயப்படுத்தி மலரிடம் சக்திவேலும் உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பின்னர் மலர் வைத்திருந்த 1500 ரூபாய் பணத்தையும் , அவர் அணிந்திருந்த செயினையும் கனகராஜ் மற்றும் சக்திவேல் ஆகியோர் பறித்துள்ளனர். அப்போது மலர் , அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் திடீரென மலரின் கழுத்தை நெறித்துள்ளனர். இதில் மலர் உயிரிழந்ததால் , அப்பெண்ணின் உடலை ஏற்காடு அடிவார காட்டு பகுதியிலேயே வீசிவிட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மலரிடமிருந்து பறித்த செயின் , கவரிங் செயின் என தெரிந்துள்ளது. இதையடுத்து ரவுடி கனகராஜ் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார் , இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
சேலத்தில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததோடு, அவரிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை