கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது செய்து செய்தனா்.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரம்யா சுதாகருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கினர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் கொடுங்கையூர் காமராஜர் சாலையில் பைக் ஷோரூம் ஒன்றை இருவரும் சேர்ந்து நடத்தி வந்துள்ளனர். இதில் இருவருக்கும் இடையே பண பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. அடுத்த சில மாதங்களிலே அந்த பைக் ஷோரூமை மூடிவிட்டனர். அப்போது முதல் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக ரம்யாவை விட்டு பிரிந்து சுதாகர் தனது மனைவியுடன் மீண்டும் வாழ தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா நேற்று இரவு கருப்பு நிற புர்கா அணிந்து சுதாகர் வீட்டிற்கு வந்து அவரது வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு ஓடிவிட்டார்.
திடீரென சத்தம் கேட்டு ஓடி வந்த சுதாகர் உடனடியாக தீயை அணைத்தார். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இரவு ரோந்து பணியில் இருந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இன்று போலீசார் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவரை கைது செய்தனர். இவர் சுதாகருடன் தவறான உறவு ஏற்பட்டு அதன் பிறகு அவர் ரம்யாவை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் ரம்யா பெட்ரோலை சுதாகரின் இருசக்கர வாகனத்தின் மீது தீ வைத்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ரம்யா மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் – விசாரணையில் அம்பலம்
